Advertisment

மேக்புக் ஏர் எம்.2-க்கு போட்டி; 512 ஜிபி எஸ்.எஸ்.டி: மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் இந்தியாவில் அறிமுகம்

மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் Go 3 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல் தளங்களில் ப்ரீ ஆர்டர் தொடங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Microsoft lap.jpg

மைக்ரோசாப்டின் சமீபத்திய லேப்டாப் கம்ப்யூட்டர் - சர்ஃபேஸ் லேப்டாப் கோ 3 இப்போது அமேசான், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் போன்ற பார்ட்னர் பிராண்டுகளில் ப்ரீ ஆர்டர் தொடங்கியுள்ளது.  12th ஜென் இன்டெல் கோர் ப்ராஸசர், 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி எஸ்.எஸ்.டி ஆகியவைகள் வழங்கப்படுகிறது. ரூ.79,990 என்ற ஆரம்ப விலையில்,  சர்ஃபேஸ் லேப்டாப் Go 3 மேக்புக் ஏர் M2  உடன் போட்டியிடுகிறது. 

Advertisment

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸ் மாடல் ரூ.79,990 மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட high-end model லேப்டாப் ரூ.99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

அமேசான் தளத்தில் வெறும் 1,999 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

சர்ஃபேஸ் லேப்டாப் Go 3 இன் முக்கிய சிறப்பம்சங்கள் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் touch input ஆதரவுடன் 3:2 விகிதத்துடன் கூர்மையான 12.4-இன்ச் பிக்சல்சென்ஸ் திரையை உள்ளடக்கியது.  லேப்டாப் Intel Core i5-1235U செயலி மூலம் 8/16 GB ரேம் மற்றும் 256/512 GB உள் சேமிப்பகத்துடன் Iris Xe ஆன்போர்டு கிராபிக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த லேப்டாப் வெறும் 1.13 KG எடையும், USB-C 3.2 மற்றும் USB-A 3.1, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் 39W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் சார்ஜ் செய்வதற்கான சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது. 

வயர்லெஸ் இணைப்பைப் பொறுத்தவரை, லேப்டாப் புளூடூத் 5.1 ஐ வழங்குகிறது, மேலும் Wi-Fi 6-க்கான ஆதரவும் உள்ளது. 720p வெப் கேமராவும் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Microsoft
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment