/tamil-ie/media/media_files/uploads/2018/02/surface-pro-759.jpg)
ஆர்.சந்திரன்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது கையடக்க கணிணி வரிசையில் தற்போது சர்ஃப்ஸ் புரோ நோட்புக் கம்ப்யூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இது, தற்போது அமேஸான் இந்தியா, ஃபிளிப் கார்ட் வலைதளங்களில் மட்டுமின்றி, நாடு முழுக்க உள்ள 130 சில்லறை விற்பனைக் கடைகளிலும் கிடைக்கும்.
12.3 அங்குலத்தில் பிக்ஸல் சென்ஸ் தொடு திரை கொண்ட இது சர்ஃபஸ் பென் 4 பயன்படுத்தவும் ஏற்றது. இந்த புதிய கையடக்க கணிணி 5 வெவ்வேறு மாடல்களில், விலைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச திறனாக, 64,999 ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக 1,82,999 ரூபாய் வரை இது வேறுபடுகிறது. இதுதவிர, இதன் கூடுதல் உபகரணங்களாக சர்ஃப்ஸ் ஆர்க் மவுஸ் உள்ளிட்ட பலவும் கூடுதல் விலையில் கிடைக்கின்றன.
8.5 மி.மீ கனம் உள்ள இது 767 கிராம் மட்டுமே எடை கொண்டது. 13.5 மணி நேரம் செயல்படக் கூடிய பேட்டரியுடன் வரும் இது 7ம் தலைமுறை இண்டல்கோர் பிரஸஸரைக் கொண்டுள்ளது
மேற்கண்ட தகவல்களை மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் இயக்குனர் வினித் துரானி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.