சமீப காலமாக பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். ட்விட்டர் தொடங்கி பல நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்திற்கு உரிமையாளரான முதல் நாளே சி.இ.ஓ பராக் அகர்வால் உள்பட உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல நாடுகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். வருவாய் இழப்பு, செலவீனங்களை குறைக்க பணி நீக்கம் செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மெட்டா, அமேசான், சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் ஊழியர்கள் பண நீக்கம் செய்வதாக அறிவித்தன. இந்நிலையில், கணினி சார் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப் இன்று (புதன்கிழமை) பொறியியல் பிரிவு மற்றும் மனித வளப் பிரிவில் பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. வருவாய் இழப்பு, தொழில்துறை சரிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
பணி நீக்கம் ஏன்?
முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் பல பிரிவுகளில் புதிதாக ஆட் சேர்ப்பு பணியை நிறுத்தியது. Amazon.com, Meta Platforms, சேல்ஸ்ஃபோர்ஸ் இன்க் தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தன. வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகப் பொருளாதார சரிவு, மென்பொருள் மற்றும் சேவைகளுக்கான தேவையில் நீடித்த மந்தநிலை ஆகியவை காரணமாக இந்த ஆட் குறைப்பு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.
கடந்த ஆண்டில் 23% வீழ்ச்சியடைந்த மைக்ரோசாப்ட் பங்குகள், நேற்று நியூயார்க் பங்கு சந்தை முடிவில் 240.35 டாலர் என்ற மதிப்பில் சிறிய அளவில் மாற்றம் அடைந்தன. மைக்ரோசாப்ட் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 2% விற்பனையை பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 24. இது 2017 நிதியாண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வருவாய் ஈட்டுதல் ஆகும். மைக்ரோசாப்டின் கிளவுட்-கம்ப்யூட்டிங் வணிகமும் கடந்த ஆண்டில் சரிவைச் சந்திக்க தொடங்கின எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/