/indian-express-tamil/media/media_files/2025/10/14/microsoft-unveils-mai-image-2025-10-14-17-40-28.jpg)
மைக்ரோசாஃப்ட்டின் புதிய பாய்ச்சல்: சொந்தத் தயாரிப்பான 'MAI-Image-1' மாடல் ரிலீஸ்!
சமூக வலைதளங்களில் நாம் பார்க்கும் ஏ.ஐ. படங்களை உருவாக்குவதில், இதுவரை ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் பங்களிப்புதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், இப்போது மைக்ரோசாஃப்ட் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதன் முதல் Text-to-Image (எழுத்திலிருந்து படம் உருவாக்கும்) மாடலை, MAI-Image-1 என்ற பெயரில் அக்.13 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாஃப்ட்டின் இந்தப் புதிய நகர்வு, இனி படங்களை உருவாக்குவது போன்ற ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு ஓபன் ஏ.ஐ-யை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பதைக் காட்டுகிறது. தங்கள் தயாரிப்புகள் முழுவதும் கிரியேட்டர்களின் வேலைகளை எளிமையாக்கும் நோக்கத்துடன் இந்த மாடலை அவர்கள் களமிறக்கியுள்ளனர்.
அறிமுகமான வேகத்தில் அசத்தல் ரேங்கிங்!
"இன்று, நாங்க முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கிய எங்கள் முதல் பட உருவாக்க மாதிரியான MAI-Image-1-ஐ அறிவிக்கிறோம். இது LMArena-வின் சிறந்த 10 டெக்ஸ்ட் டூ இமேஜ் மாடல்களில் இடம்பிடித்துள்ளது" என்று மைக்ரோசாஃப்ட் அதன் அதிகாரப்பூர்வ பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
MAI-Image-1 மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, அது LMArena (மாடல்களை மதிப்பிடும் பிரபலமான தளம்) பட்டியலில், உலகின் முதல் 10 சிறந்த Text-to-Image மாடல்களில் இடம்பிடித்து மைக்ரோசாஃப்ட்டை பெருமைப்படுத்தியுள்ளது. "திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான அல்லது சலிப்பூட்டும் படைப்புகள் வருவதைத் தவிர்க்க நாங்க அதிக கவனம் செலுத்தியுள்ளோம்," என்று மைக்ரோசாஃப்ட் கூறுகிறது. இதன் நோக்கம், படைப்பாளிகளுக்கு உண்மையான மதிப்பை வழங்குவதுதானாம்.
நிஜம் போல ஜொலிக்கும் படங்கள்!
இந்த MAI-Image-1 மாடலின் மிகப்பெரிய பலம் என்ன தெரியுமா? இது மிக வேகமாக (Instant Generations) படங்களை உருவாக்குவதுடன், புகைப் படங்களை ஒத்த (Photorealistic) படங்களை உருவாக்குவதிலும் சிறந்து விளங்குகிறது. ஒளி அமைப்பு, நிலப்பரப்புகள் போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, அது நிஜமாக எடுக்கப்பட்ட புகைப்படமோ என்று வியக்கும் வகையில் இதன் உருவாக்கம் இருக்கும் என மைக்ரோசாஃப்ட் உறுதியளிக்கிறது.
மைக்ரோசாஃப்ட், ஏற்கெனவே MAI-Voice-1 மற்றும் MAI-1-preview போன்ற மாடல்களை வெளியிட்ட நிலையில், MAI-Image-1 இப்போது அந்த வரிசையில் 3வது இடத்தில் இணைந்துள்ளது. விரைவில் இந்த MAI-Image-1-ன் அட்டகாசமான உருவாக்கங்களை நாம் Copilot மற்றும் Bing Image Creator தளங்களில் பயன்படுத்தலாம். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் மைக்ரோசாஃப்ட் தனிப் பாதை அமைத்துக் கொள்வதைக் காட்டும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.