முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கணினி, லேப்டாப்களுக்கான விண்டோஸ் ஓ.எஸ் சேவையை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த மாத இறுதியில் ( ஜனவரி 31) முதல் Windows 10 Home மற்றும் Pro-க்கான உரிமம் வழங்குவதை நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் விண்டோஸ் 10, பிரோ பயனர்கள் பயப்படத் தேவையில்லை. 2025-ம் ஆண்டு வரை தொடர்ந்து அப்டேட், சேவைகள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டு விண்டோஸ் 10 ஓ. எஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. மில்லியன் கணக்கான கணினி, லேப்டாப் பயனர்கள் விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகின்றனர். இதன் அடுத்த வெர்ஷனான விண்டோஸ் 11 ஓ.எஸ் வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் இது அதிகளவு பயன்படுத்தப்பட வில்லை. தற்போது விண்டோஸ் 10 விற்பனையை நிறுத்தினால் புதிய பயனர்கள் விண்டோஸ் 11 ஓ.எஸ் மட்டும் பெற முடியும் என்ற வகையில் தற்போது இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அப்டேட் வழங்கப்படும்
Windows 10 Home மற்றும் Windows 10 Pro க்கான மைக்ரோசாப்ட்டின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு பக்கத்தில்,
"ஜனவரி 31, 2023 வரை மட்டும் விண்டோஸ் 10 ஓ.எஸ் பதிவிறக்கம் செய்ய முடியும். அதன் பின் விற்பனை நிறுத்தப்படும். அக்டோபர் 14, 2025 வரை வைரஸ்கள், ஸ்பைவேர் மற்றும் பிற மால்வேர்களில் இருந்து உங்கள் கணினியைப் பாதுகாக்க உதவும் பாதுகாப்பு அப்டேட் (பாதுகாப்பு குறைபாடுகளை நீக்கும்) அப்டேட்கள் Windows 10க்கு தொடர்ந்து வழங்கப்படும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விண்டோஸ் 11 புது அம்சங்கள், வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் அதற்கு அப்கிரேடு செய்ய வேண்டும் என நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. விண்டோஸ் 11 ஓ.எஸ்ஸில் interface changes , performance enhancements செய்யப்பட்டுள்ளது என நிறுவனம் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/