சாம்சங், கூகுள் பிக்சல், விவோ, ஒன்+... உங்க ஸ்மார்ட்போன் ஆபத்தில்! ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க டிப்ஸ்!

இந்திய சைபர் பாதுகாப்பு முகமையான CERT-In, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 முதல் ஆண்ட்ராய்டு 16 வரையிலான பதிப்புகளில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்திய சைபர் பாதுகாப்பு முகமையான CERT-In, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 13 முதல் ஆண்ட்ராய்டு 16 வரையிலான பதிப்புகளில் பல பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Android Phones Hacking Risk

சாம்சங், கூகுள் பிக்சல், விவோ, ஒன்+... உங்க ஸ்மார்ட்போன் ஆபத்தில்! ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க உடனே இதை செய்யுங்கள்!

இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்புக் குழு (CERT-In) ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அவசர மற்றும் உயர்-அபாய எச்சரிக்கையை விடுத்து உள்ளது. அரசு சார்ந்த இந்த சைபர் கண்காணிப்பு நிறுவனம், ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் பல முக்கிய பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளது. இந்தப் பாதிப்புகள் மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

ஆபத்தில் இருக்கும் ஆண்ட்ராய்டு பதிப்புகள்

Advertisment

புதிய Vulnerability Note CIVN-2025-0202-இன் படி, ஆண்ட்ராய்டு 13, ஆண்ட்ராய்டு 14, ஆண்ட்ராய்டு 15, புதிய ஆண்ட்ராய்டு 16 ஆகிய பதிப்புகள் இந்த பாதிப்பால் பாதிக்கப்படலாம். ஹேக்கர்கள் இந்த பாதிப்புகளைப் பயன்படுத்தினால், அங்கீகாரம் இல்லாமல் ஒரு சாதனத்தை அணுகி, முக்கியத் தகவல்களைத் திருட தீங்கிழைக்கும் குறியீடுகளை இயக்க (அ) DoS (சேவை மறுப்பு) தாக்குதல் மூலம் சாதனங்களை முழுமையாக செயலிழக்கச் செய்ய முடியும்.

எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

CERT-In இந்த ஆபத்தை 'ஹை' என மதிப்பிட்டுள்ளது. இந்த குறைபாடுகள் ஆண்ட்ராய்டு ஃபிரேம்வொர்க், ஆண்ட்ராய்டு ரன்டைம், சிஸ்டம், வைடுவைன் DRM, மீடியாடெக் மற்றும் குவால்காம் சிப்கள் உட்பட பல முக்கிய கூறுகளில் கண்டறியப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், ரியல்மீ, விவோ, ஒப்போ, மோட்டோரோலா மற்றும் கூகுள் பிக்சல் போன்ற பல்வேறு பிராண்டுகளின் ஃபோன்களும் இந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன.

உங்கள் ஃபோனை பாதுகாப்பது எப்படி?

ஆண்ட்ராய்டு பயனர்கள் உடனடியாகத் தங்கள் ஸ்மார்ட்போனைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உங்கள் ஃபோன் உற்பத்தியாளர் வழங்கும் சமீபத்திய பாதுகாப்பு அப்டேட்களை உடனே இன்ஸ்டால் செய்யவும். உங்கள் ஃபோனின் செட்டிங்ஸில் உள்ள பாதுகாப்பு பேட்ச் நிலையை சரிபார்க்கவும். அது 2025-09-01 அல்லது 2025-09-05 என இருந்தால், பாதுகாப்பாக இருக்கிறீர்கள். இல்லையென்றால், உடனே உங்கள் ஃபோனைப் புதுப்பிக்கவும்.

Advertisment
Advertisements

அடையாளம் தெரியாத இணையளதளத்தில் இருந்து ஆப்களை இன்ஸ்டால் செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் ஃபோனில் கூகுள் பிளே புரோடெக்ட் (Google Play Protect) எப்போதும் இயங்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஃபோன் அதிக வெப்பமடைதல், பேட்டரி விரைவாகத் தீர்ந்துபோதல் அல்லது சந்தேகத்திற்குரிய பாப்-அப்கள் போன்ற அசாதாரண செயல்பாடுகளை கவனியுங்கள். இந்த எளிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் தனிப்பட்ட டேட்டா, சாதனத்தையும் சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கலாம். 

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: