பூமியை விட 2 மடங்கு பெரிதான மினி நெப்டியூன்: உயிரினங்கள் வாழ சாத்தியம்

வானியல்  ஆய்வாளர்கள் வாழும் தன்மையுடைய ஒரு எக்ஸோப்ளானெட்டைக் (Exoplanet) கண்டுபிடித்துள்ளனர். இது பூமியின் இரு மடங்கு பெரியது.

சமீபத்திய வளர்ச்சியாக,வானியல் ஆய்வாளர்கள் வாழும் தன்மையுடைய ஒரு எக்ஸோப்ளானெட்டைக் (Exoplanet) கண்டுபிடித்துள்ளனர். இது பூமியின் இரு மடங்கு பெரியது.

K2-18b என பெயரிடப்பட்ட இந்த கிரகம், பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.  இதன் ஆரம் (radius ) பூமியை 2.6 மடங்கு அதிகம், இதன் நிறை (Mass) பூமியை விட 8.6 மடங்கு அதிகம். அதன் நட்சத்திரை சுற்றி வரும் தொலைவு, பூமியும்-சூரியனுக்கும் உள்ள தொலைவு இருப்பதால் தண்ணீர் (liquid water) இருப்பதற்கான வாய்ப்பை அனுமதிக்கிறது.

அதன் ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தில் நீர் நீராவி இருப்பதைக் கண்டறிந்த இரண்டு வெவ்வேறு குழுக்கள் கடந்த ஆண்டு கண்டறிந்தனர். இருப்பினும், வளிமண்டலத்தின் அளவும், K2-18b உட்புற நிலைகளை குறித்த தெளிவான தகவல் அப்போது தெரியவில்லை.

இந்நிலையில், ​​கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் ஒரு குழு, எக்ஸோபிளேனட்டின் நிறை, ஆரம் மற்றும் வளிமண்டலத் தரவைப் பயன்படுத்தி, ஹைட்ரஜன் நிறைந்த வளிமண்டலத்தின் கீழ் தண்ணீர் இருப்தற்கான சாத்தியத்தை  தீர்மானித்துளனர். இந்த ஆய்வுக் கட்டுரைகள்  தற்போது, ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸ் என்ற அறிவியில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது .

ஏன் இது முக்கியமான கண்டுபுடிப்பு: ஏனெனில் இதன் அளவ. K2-18b என்ற இந்த கிரகம் நெப்டியூன் கிரகத்தின் ஒரு சிறிய பதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு பெரியது. இதுநாள் வரையில் பூமியைப் போன்ற ஒரு எக்ஸோபிளானெட்டை மட்டும் தான் வானியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். ஆனால், தற்போதைய கண்டுபிடிப்பால் பூமியை விட கணிசமாக பெரிதாக இருக்கும் எக்ஸோபிளானெட்டுகளையும் நாம் ஆய்வை மேற்கொள்ளலாம். மற்ற கிரகத்தில் வாழக்கூடிய நிலைமைகளுக்கான தேடக் கூடிய வாய்புகளும் அதிகமாகிறது.

K2-18b கிரகம் மனித வாழ்க்கையை ஆதரிக்குமா : “பல எக்ஸோப்ளானெட்டுகளின் வளிமண்டலங்களில் நீர் நீராவி கண்டறியப்பட்டிருந்தாலும்,கிரகத்தின் மேற்பரப்பில் வாழக்கூடிய நிலைமைகள் உள்ளன என்று பொருளல்ல” என்று கேம்பிரிட்ஜின் வானியல் ஆய்வு  நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நிக்கு மதுசூதன் கூறியுள்ளார்.

“வாழும் தன்மையை உறுதி செய்ய, கிரகத்தின் உட்புறம் (Planet Interior), வளிமண்டல நிலைமைகள் பற்றிய ஒருங்கிணைந்த புரிதல் தேவை. குறிப்பாக, வளிமண்டலத்தின் அடியில், எந்த சூழ்நிலையில் திரவ நீர் இருக்க முடியும் போன்ற புரிதல்

K2-18b எக்ஸோப்ளானெட்  ஹைட்ரஜன் உறையால் சூழப்பட்டுள்ளது, அதன் கீழ்  “உயர் அழுத்த நீர்” அடுக்கு தென்படுகிறது.  கிரகத்தின் உட்புறம்  பாறை மற்றும் இரும்பு  இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஹைட்ரஜன் உறை மிகவும் தடிமனாக இருந்தால்,  மேற்பரப்பில் இருக்கும் ‘நீர் அடுக்கின்” மீது அதிகமான அழுத்தமும், வெப்பமும் உருவாகும். இதனால் உயிர் வாழக்கூடிய  தன்மை மிகவும் அரியது  . இருப்பினும், மதுசூதன் மற்றும் அவரது குழுவும், K2-18b எக்ஸோப்ளானெட்டின் அளவு மிகவும் பெரிதாக இருந்தாலும், அதன் ஹைட்ரஜன் உறை மிகவும் தடிமனாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறார்கள். தற்போது அளவிடப்படும் நீர் அடுக்கு, வாழ்க்கையை ஆதரிக்க சரியான நிலைமைகளைக் கொண்டிருக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

வளிமண்டலம், நிறை(maas) மற்றும் ஆரம் (radius) ஆகியவற்றின் தற்போதைய விவரங்கள் மூலம்  K2-18b கிரகத்தின் அமைப்பு மற்றும் கட்டமைப்பை தீர்மானித்தனர்.

இதன்மூலம், K2-18b-ல் ஹைட்ரஜன் உறைகளின் அதிகபட்ச அளவு அதன் நிறையில் 6 சதவிகிதம் இருப்பதைக் கண்டறிந்தனர் (இந்த ஹைட்ரஜன் உறைகளின் இன்னும் குறைவாகக் கூட இருக்கலாம் ). இவ்வளவு ஏன்…. பூமியில் காணப்படும் பெருங்கடல்கள் போன்ற அமைப்பு கூட K2-18b-ல் இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mini neptune size exoplanet could possibly support life

Next Story
கூகுள் ”க்ரோமுக்கு” பிரச்சனை… உடனே அப்டேட் செய்யுங்கள்… எச்சரிக்கும் வல்லுநர்கள்!Update Google Chrome latest version immediately to rectify the chances of hacking
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com