Advertisment

5 மாநிலத் தேர்தல்: சமூக வலைதளங்களில் போலி செய்திகளை கண்டறிவது எப்படி?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவறான தகவல்களும், பொய்யான செய்திகளும் எவ்வாறு பரவுகின்றன, அது எப்படி தேர்தல் செயல்முறையை பாதிக்கும் என்பதை நாங்கள் பார்க்கிறோம். இதை கண்டறிவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
MP Fact check.jpg

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு இம்மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம்  161 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். எந்தவொரு தேர்தலுக்கும் முன்னதாக, தவறான தகவல் மற்றும் போலி செய்திகள் பரப்பப்படுவது வழக்கமாக உள்ளது. அதை முன்னுரிமை அடிப்படையில் சமாளிக்க வேண்டும். 

Advertisment

எடுத்துக்காட்டாக, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் சமீபத்திய வீடியோவை எடுத்துக் கொள்ளுவோம். அந்த வீடியோவில், சவுகான் பேசும் போது, மக்கள் பாஜகவால் வருத்தமடைந்துள்ளனர் என்றும் கட்சி இந்த முறை தோல்வியை சந்திக்கும் என்றும் அவர் பேசுவது போல் உள்ளது. 

இந்த வீடியோவின் உண்மை நிலையை கண்டறிந்த போது, இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி போபால் சென்றது தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரிஜினல் வீடியோ உடன் போலி ஆடியோ சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. 

சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட மற்றொரு போட்டோவில், சட்டீஸ்கரின் முன்னாள் முதல்வர் ராமன் சிங், அமலாக்கத் துறையின் (ED) லோகோ படத்திற்கு திலகம் பூசுவது போன்று பகிரப்பட்டது. ஆனால் அந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் பகிர்ந்துள்ள உண்மையான படம், அவர் கடவுள் நாராயணனின் படத்திற்கு திலகம் பூசுவது போன்று இருக்கும்.

 

இந்த எடுத்துக்காட்டுகள், தேர்தலின் போது தவறான தகவல்களும், போலிச் செய்திகளும் எவ்வாறு பரவுகின்றன என்பதையும், அது எவ்வாறு தேர்தல் செயல்முறையை  குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்தும் என்பதையும் காட்டுகிறது. 

இந்நிலையில், தகவல்களைச் சரிபார்க்க பல வழிகள் இருந்தாலும், இங்கு கூகுள் , ‘Google Fact Check Explorer’ எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம். 

Google Fact Check Explorer பயன்படுத்துவது எப்படி? 

1. கூகுள் ஓபன் செய்து சர்ச் பாரில், 'Google Fact Check Explorer ' என்பதை டைப் செய்யவும்.
2. Dialogue box ஒன்று ஓபன் ஆகும். 

DB.jpg


3. எந்த சமூக ஊடக போஸ்ட் பற்றி  search செய்ய வேண்டுமோ அது பற்றிய  கீவோர்ட்  என்டர் செய்யவும். மொழிகள் கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

இதை சர்ச் செய்து தகவல்கள் காண்பிக்கப்படும். இதை வைத்து அந்த போஸ்ட்-ன் உண்மை தன்மையை அறியலாம் . 

How the Fact Check explorer works

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Elections
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment