Advertisment

சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறதா கூகுள்? - பிளே ஸ்டோரில் இருந்து 'Remove China Apps' நீக்கம்

இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் தங்கள் தொலைபேசியில் இந்த Remove China Apps நிறுவியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
remove china apps, remove china apps removed, கூகுள், கூகுள் பிளே ஸ்டோர், டிக்டாக், சீனா, remove china apps deleted, remove china apps suspended, remove china apps uninstall, how to delete remove china apps, remove china apps google play store

remove china apps, remove china apps removed, கூகுள், கூகுள் பிளே ஸ்டோர், டிக்டாக், சீனா, remove china apps deleted, remove china apps suspended, remove china apps uninstall, how to delete remove china apps, remove china apps google play store

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைத்த Remove China Apps எனும் ஆப் தற்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டிக்டாக் போட்டியாக செயல்பட்ட 'மிட்ரன்' இந்திய ஆப் கூகுளில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், Remove China Apps ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் இப்போது கண்டறிந்துள்ளது. ஆனால், ஏன் இந்த ஆப் நீக்கப்பட்டது என்பது குறித்தும், மீண்டும் அது கிடைக்குமா என்பது குறித்தும் எந்த தகவலையும் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

Advertisment

ஜெய்ப்பூரை தளமாகக் கொண்ட OneTouchAppLabs தான் இந்த ஆப்-ஐ உருவாக்கியது. இருப்பினும், பயன்பாடு ஏன் அகற்றப்பட்டது என்பதை நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

வெள்ளிக் கிழமை வானில் அரிய நிகழ்வு: பெனும்பிரல் சந்திர கிரகணம் பற்றி அறிந்தீர்களா?

கூகுள் வழக்கமாக Play Store-ன் கொள்கைகளை மீறும் ஆப்-களை நீக்குகிறது. மிட்ரனுக்கும் இதேதான் நடந்தது. சிஎன்பிசிடிவி 18 அறிக்கையில், கூகுளின் கொள்கையை மீறியதற்காக அதை நிறுத்தி வைக்க முடிவு செய்தது. அதாவது, மற்ற ஆப்-களில் இருந்து கன்டென்ட்களை அப்படியே காப்பி செய்தது, கொள்கை "மீறலுக்கு சமம்” என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

உங்கள் தொலைபேசியில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட சீனா ஆப்ஸ் ஆப்-ஐ வைத்திருந்தால், அது தொடர்ந்து வேலை செய்யும்.

பெயருக்கு ஏற்றார் போல, இந்த Remove China Apps தொலைபேசிகளில் உள்ள சீனாவில் உருவாக்கிய எல்லா ஆப்-களையும் நீக்க அனுமதிக்கிறது. இது பயனரின் சாதனத்தை ஸ்கேன் செய்து, மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சீன ஆப்களை பட்டியலிடுகிறது. எந்த சீன ஆப்-ஐ வைத்திருக்க வேண்டும் அல்லது அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானிக்க பயனர்களை இந்த ஆப் அனுமதிக்கிறது.

இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் சீன ஆப்களை நீக்கும் நோக்கத்துடன் தங்கள் தொலைபேசியில் இந்த Remove China Apps நிறுவியுள்ளனர். உண்மையில், செவ்வாய்க்கிழமை காலை வரை இது பிளே ஸ்டோரில் சிறந்த இலவச ஆப்-ஆக இருந்தது.

Aarogya Setu ஆப் - இந்த கையில் ஐடியா; அந்த கையில் ரூ4 லட்சம்

இணைய பாதுகாப்பு ஆய்வாளர் சத்யஜித் சின்ஹா, இந்த ஆப் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து indianexpress.com க்கு முன்னர் தெரிவித்து இருந்தார். சீனாவில் உருவாக்கப்பட்ட ஆப்களின் தரவுத்தளத்துடன் ஒப்பிடுவதன் மூலம் ஆப் டெவலப்பரின் இடத்தை இந்த ஆப் அடையாளம் காண்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த ஆப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும், அதை தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவிறக்குவது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் சின்ஹா கூறியிருந்தார். “இந்த ஆப்-ன் ஸ்கேன், மொபைலில் ஏற்கனவே நிறுவப்பட்ட Android பயன்பாட்டு தொகுப்பில் (APK) மட்டுமே கவனம் செலுத்துகிறது. எனவே, சேமிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளில் எந்த மாற்றத்தையும் இது பாதிக்காது, ”என்று அவர் indianexpress.com க்கு விளக்கினார்.

எனவே, கூகுள் ஏன் ப்ளே ஸ்டோரிலிருந்து ஆப்-ஐ அகற்றியது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment