சீன நிறுவனமான சியோமி, தனது பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய அப்டேட் 12.5யின் வெற்றியை தொடர்ந்து, மேம்பட்ட வசதிகளுடன் MIUI 13 கொண்டு வந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
பெர்பார்மன்ஸ் அப்கிரேட்
MIUI 13இல் மேம்பட்ட பெர்பார்மன்ஸ் கிடைக்கவுள்ளதாக சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, MIUI 12.5இல் மூன்றாம் தரப்பு செயலிகளில் ஏற்பட்ட சீக்கலை தவிர்க்கும் வகையில், புதிய MIUI 13 வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமியின் சொந்த செயலிகள் இந்த அப்டேட்கள் சிறப்பாக இயக்கும் என கூறப்படுகிறது.
பிரைவசி மற்றும் பாதுகாப்பு
பிரைவசி அம்சத்தில் MIUI 13இல் அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளது. புதிய அப்டேட்டில் முகம் சரிபார்ப்பு பாதுகாப்பு, பிரைவசி வாட்டர்மார்க் மற்றும் மோசடி சம்பவங்களை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பிரைவசி வாட்டர்மார்க் ஆப்ஷன், பயனர்கள் தங்கள் ஐடிகள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களின் படங்களை வாட்டர்மார்க் உடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும். இதன் மூலம் அதை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும்.
புதிய ஃபான்ட்,வால்பேப்பர், விட்ஜட்ஸ்
MIUI 13இல் புதிய MiSans ஃபான்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்லது. இந்த புதிய ஃபான்ட் flat-ஆகவும், குட்டியாகவும் இருக்கும். இதில், பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்துகளுடன் பொருந்தும் வகையில் ஹைபன்களின் உயரத்தை தானாக சரிசெய்யும் வசதி உள்ளன.
சமீபத்தில் MIUI அப்டேட்களில் கிடைக்கும் லைவ் வால்பேப்பரில் கூடுதல் ஆப்ஷனும் புதிய அப்டேட்டில் கிடைக்கவுள்ளது. இந்த ஆண்டு, புதிய வால்பேப்பர்களில் சில கிரிஸ்டல் வால்பேப்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவற்றை 8K டைம்லேப்ஸ் புகைப்படம் மூலம் துருவமுனைப்பு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக சியோமி கூறுகிறது.
MIUI 13 இல் ஏராளமான புதிய விட்ஜெட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்கள் டிஸ்பிளே திரையில் விருப்பப்படி டிசைன் செய்திட கூடுதல் வழிகளை அனுமதிக்கும்.
MIUI 13 பேட்
MIUI 13 பேட் என்கிற சாப்ட்வேர், சியோமியின் டேப்லெட்டுகளுக்கு உகந்ததாக உள்ளது. விண்டோ மற்றும் ஃபுல்ஸ்கிரீன் மோடுகளுக்கு இடையே விரைவாக மாறுவதற்கு ஷார்ட்கட்கள், விண்டோஸ் 11 போன்ற டாஸ்க்பார் மற்றும் விரைவான மல்டி டாஸ்கிங்கிற்கான டிராப்-ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. பெரிய திரைகளில் இந்த வசதி உதவியாக இருக்கும்.
எந்த செல்போன்களுக்கு MIUI 13 கிடைக்கவுள்ளது
சியோமி MIUI 13-ஐ ஜனவரி 2022 இறுதிக்குள் முதல் பேட்ச் செல்போன்களுக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பட்ட அப்டேட்டை பெறும் சாதனங்களில் முதலில் சியோமி 12, சியோமி 12 Pro மற்றும் சியோமி 12X ஆகியவை இருக்கும். இதனையடுத்து, மற்ற செல்போன்களுக்கு பேட்ச் வாரியாக அறிமுகப்படுத்தப்படும்.
- Mi-series - Mi 11, Mi 11 Lite, Mi 11 Lite 5G, Mi 11 Ultra, Mi 11i, Mi 11X Pro, மற்றும் Mi 11X
- சியோமி-series – சியோமி 11T Pro, சியோமி 11T, சியோமி 11 Lite 5G NE மற்றும் சியோமி 11 Lite NE
- Tablet-series – சியோமி Pad 5
- ரெட்மி-series - ரெட்மி 10, ரெட்மி 10 Prime,
- ரெட்மி நோட்-series – ரெட்மி நோட் 8 (2021), ரெட்மி நோட் 10/ 10 Pro/ 10 Pro Max and ரெட்மி நோட் 10 JE
அடுத்தடுத்த பேட்ச்களில் கூடுதல் சாதனங்களுக்கு வரும் அப்டேட் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.