scorecardresearch

Poco F4, Xiaomi 11T போன்களில் MIUI 14 அப்டேட்.. இந்த அப்டேட் சிறப்பம்சங்கள் என்ன?

MIUI 14 என்பது போன் சாப்ட்வேர் அம்சம் போன்றது. இந்த சாப்ட்வேர் அப்டேட் Poco F4, Xiaomi 11T போன்களில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Poco F4, Xiaomi 11T போன்களில் MIUI 14 அப்டேட்.. இந்த அப்டேட் சிறப்பம்சங்கள் என்ன?

MIUI 14 ஆனது சூப்பர் ஐகான்கள், பயன்பாடுகளுக்கான அறிவிப்புகளை முடக்கும் திறன் போன்ற பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் பல அண்டர்-தி-ஹூட் சிஸ்டம் மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துகிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14-ஐ Xiaomi வெளியிட்டது. இது MIUI 13-இன் மேம்படுத்தப்பட்ட அம்சமாகும். MIUI 13 ஓ.எஸ்-யை ஒப்பிடுகையில் இது குறைந்த மெமரி ஸ்பேஸ் கொண்டுள்ளது.

ஜியோமி இப்போது Poco F4 மற்றும் Xiaomi 11Tக்கான MIUI 14 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. V14.0.1.0.TLMMIXM மற்றும் V14.0.3.0.TKWMIXM ஆகிய பில்ட் எண்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. MIUI 14 ஆனது சிஸ்டத்தில் பல அண்டர்-தி-ஹூட் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது மற்றும் ‘சூப்பர் ஐகான்கள்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதேபோல் சர்ச் அம்சத்திலும் புதிய மேம்படுத்தல்களை கொண்டுள்ளது.

ஜியோமி அதன் bloatware மற்றும் விளம்பர அம்சங்களை நீக்கியதாக தெரிகிறது. MIUI 14 ஓ.எஸ்ஸில் 8 system apps மட்டுமே உள்ளன. அவை அன்இன்ஸ்டால் செய்ய முடியாது. மேலும், notifications அறிவிப்பை நிறுத்தி வைப்பதற்கான திறன், கிளிப்போர்டு மற்றும் மொழி விருப்பங்கள் போன்ற Android 13 அம்சங்களையும் இந்த ஓ.எஸ் பெற்றுள்ளது.

Poco F4 கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மற்றும் 6.67-இன்ச் 120 ஹெர்ட்ஸ் HDR10+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸுடன் வருகிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகிறது.

Xiaomi 11T ஆனது MediaTek Dimensity 1200 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 அவுட் ஆஃப் தி பாக்ஸ் அடிப்படையிலான MIUI 12.5 இல் இயங்குகிறது. Xiaomi 11T மற்றும் Poco F4-க்கான
MIUI 14 அப்டேட் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Miui 14 update now available for poco f4 and xiaomi 11t