திடீரென மொபைல் நெட் வேலை செய்யவில்லையா? இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! | Indian Express Tamil

திடீரென மொபைல் நெட் வேலை செய்யவில்லையா? இந்த ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!

மொபைல் டேட்டா பிரச்சனைகளை சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

UPI transaction limit and Online transaction charges
உங்களது வங்கிகளில் portfolio charges உள்ளனவா என செக் செய்து கொள்ளுங்கள்.

இன்றைய நாளில் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாததாகி விட்டன. ஷாப்பிங் செய்வது முதல் காய்கறி வாங்குவது வரை
அனைத்தும் ஆன்லைன் மையமாகி விட்டது. இன்டர்நெட் இக்காலத்தில் புரட்சி செய்து வருகிறது. தொழில்நுட்பம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. இந்நிலையில் நம்மில் பலரும் தற்போதும் மொபைல் டேட்டா பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக முக்கியமான சமயங்களில் பணம் அனுப்பும் போது, டாக்ஸி புக் செய்யும் போது எனப் பல நேரங்களில் மொபைல் டேட்டா பிரச்சனைகளை எதிர்கொண்டு இருப்போம். மொபைல் டேட்டா பிரச்சனைகளை சரிசெய்ய சில எளிய வழிமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.

  1. Airplane mode அல்லது போனை ரீஸ்டார்ட் செய்யவும்

உங்கள் போன் நெட் வேலை செய்யவில்லை என்றால் முதலில் உங்கள் போனில் airplane mode ஆப்ஷனை ஆன் செய்யவும். பின் சிறிது நேரம் கழித்து அதை ஆப் செய்து, மொபைல் டேட்டாவை கனெக்ட் செய்யவும். இது பெரும்பாலும் உதவிகரமாக இருக்கும். இதை செய்யும் நெட் கனெக்ட் ஆகவில்லை என்றால் போன் ரீஸ்டார்ட் செய்து ஆன் செய்து கனெக்ட் செய்யவும்.

  1. Re-insert your SIM card

முந்தைய டிப்ஸ் செய்தும் போன் நெட் வேலை செய்யவில்லை என்றால் உங்கள் சிம் கார்டை அகற்றி மீண்டும் இணைத்துப் பார்க்கவும். இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

  1. இரண்டு சிம் பயன்படுத்தும் போது

இரண்டு சிம் பயன்படுத்தும் போது உங்கள் போனில் best available network ஆப்ஷனை ஆன் செய்து கொள்வது உதவும். இதற்கு ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் போனில் செட்டிங்க்ஸ் ஆப்ஷன் சென்று மொபைல் டேட்டா செலக்ட் செய்யவும். அங்கு SIM management பக்கத்திற்கு செல்லவும். அதில் Switch data connection என்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.

  1. போன் அப்டேட்

நம்மில் பலரும் இந்த ஆப்ஷனை சரிவரச் செய்வது இல்லை. போன் அப்டேட் செய்வது மிகவும் அவசியம். சாப்ட்வேர் அப்டேட்களை அவ்வப்போது செய்வது முக்கியம். அடிக்கடி மொபைல் டேட்டா பிரச்சனை ஏற்பட்டால் போன் அப்டேட் ஆகி உள்ளதா என்பதை செக் செய்து பயன்படுத்துங்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Mobile data not working simple ways you can fix the issue