Mobile Number Portability MNP New Rules : உங்களின் போன் நம்பரை ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குக்கு மாற்ற வேண்டும் என்றால் முன்பு 15 நாட்கள் வரை தேவைப்படும். ஆனால் தற்போது ட்ராய் கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகளின் படி போர்டபிலிட்டி மூலமாக வெறும் 5 வேலை நாட்களில் நீங்கள் போன் நம்பர்களை மாற்றிவிடலாம். டிசம்பர் 16ம் தேதி முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
Mobile Number Portability என்றால் என்ன?
தான் பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் ஆப்பரேட்டரின் சேவைகள் பிடிக்கவில்லை என்றால் போன் நம்பரை மாற்றாமல் ஆப்பரேட்டிங் சேவைகளை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றினால் அது மொபைல் நம்பர் போர்டபிலிட்டி என்று அழைக்கப்படும்.
மற்றொரு நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்?
ஒவ்வொரு நிறுவனத்தின் பாலிசிகளைப் பொறுத்து நாட்கள் மாறுபடும். அதிகபட்சமாக 15 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால் தற்போதைய புதிய விதிகளின் படி ஒரே லைசன்ஸ்ட் சர்வீஸ் ஏரியாவுக்குள் நெட்வொர்க்கை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 3 நாட்களில் நெட்வொர்க் மாற்றப்படும். மற்ற லைசன்ஸ்ட் சர்வீஸ் ஏரியாவுக்குள் நெட்வொர்க்கை மாற்ற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு 5 நாட்களுக்குள் நெட்வொர்க் மாற்றப்படும். ஆனால் ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் இந்த சேவை மாற்றத்திற்கு 15 நாட்கள் வரை ஆகும்.
வேறொரு நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்றுவது எப்படி?
ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு நம்பரை மாற்ற யுனிக் போர்ட்டிங் கோட் (Unique Porting Code) தேவைப்படும். இதனை ஜெனரேட் செய்ய PORT என்ற வார்த்தையை தொடர்ந்து உங்களில் 10 இலக்க போன் நம்பர்களுடன் இணைத்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். வாடிக்கையாளர்கள் பிறகு யூ.பி.சியை எஸ்.எம்.எஸ் மூலம் பெறுவார்கள். ஜம்மு, அசாம், வடகிழக்கு எல்.எஸ்.ஏக்கள் தவிர்த்து இதர பகுதிகளில் 4 நாட்கள் வேலிடிட்டியை பெற்றிருக்கும் இந்த எண்கள்.
இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் கஸ்டமர் சர்வீஸ் செண்டருக்கு சென்று கஸ்டமர் அக்யூசிசன் ஃபார்மையும் (Customer Acquisition Form (CAF)) போர்ட்டிங் ஃபார்மையும் பூர்த்தி செய்து தர வேண்டும். தேவையான ஆவணங்களை சமர்பித்தால் புதிய சிம் கார்டுகள் வழங்கப்படும். பின்னர் போர்ட்டிங் ரெக்வெஸ்ட்டுக்கான கன்ஃபர்மேசன் மெசேஜை வாடிக்கையாளர் பெறுவார். 5 நாட்களில் நெட்வொர்க் மாற்றப்பட்டுவிடும். போர்ட்டிங் விண்ணப்பத்தை கேன்சல் செய்ய விரும்பினால் CANCEL ஒரு ஸ்பேஸ் விட்டு உங்களின் 10 இலக்க எண்களை இணைத்து 1900 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுவிடும்.
மேலும் படிக்க : ஆப்பிளைப் போன்றே ரியல்மீ பட்ஸ் ஏர்… எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.