Mobile Phone Diwali Offers Tamil News, Mobile Phone Under 20000: விரைவில் தீபாவளி வரவிருக்கிறது. புதிய சாதனங்கள் வாங்க இது சிறந்த நேரமும்கூட. இ-காமர்ஸ் நிறுவனங்களான ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில், சில தொலைபேசிகளில் நல்ல சலுகைகள் வழங்குகின்றன. ரூ.20,000-க்கு கீழ் புதிய தொலைபேசியை வாங்க நீங்கள் பணத்தை சேமித்து வைத்திருந்தால், இந்த பண்டிகை விற்பனையை நிச்சயம் தவறவிட்டுராதீர்கள்.
Mobile Phone Under 20000: மொபைல் போன் ஆஃபர்
ரூ.20,000 விலையில் சந்தையில் கிடைக்கும் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
ரியல்மீ நர்சோ 20 ப்ரோ

ரியல்மீ நர்சோ 20 ப்ரோ தற்போது ரூ.14,999 விலையில் கிடைக்கிறது. இந்த சாதனம் சமீபத்தில்தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனால் தற்காலிக விலைக் குறைப்பு இதில் எதுவுமில்லை. எச்டிஎஃப்சி பேங்க் கிரெடிட் மற்றும் எளிய இஎம்ஐ ஆகியவற்றில் 1,000 ரூபாய் தள்ளுபடியை ரியல்மீ அளிக்கிறது. இந்த சலுகை நவம்பர் 14 வரை நீடிக்கும். ரூ.1,000 சலுகை ஃப்ளிப்கார்ட்டிலும் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இரண்டிற்கும் பொருந்தும். இது தவிர, ரூ.14,350 வரை எக்ஸ்ச்செஞ் சலுகையும் ஃப்ளிப்கார்ட்டில் உள்ளது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, புதிய ரியல்மீ நர்சோ தொலைபேசியில் 6.5 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதமும் 480 nits உச்ச பிரகாச அமைப்பும் உள்ளது. இது, மீடியா டெக் ஹீலியோ ஜி 95 SoC-யினால் இயக்கப்படுகிறது. குவாட் பின்புற கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இந்த சாதனம், 65W சூப்பர் டார்ட் சார்ஜ் வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10

ரூ.8,999 விலையில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனை வாங்கலாம். 6 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டை மேலே குறிப்பிட்ட விலையில் ஃப்ளிப்கார்ட் விற்பனை செய்கிறது. இந்த சாதனம் இந்தியாவில் ரூ.9,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது தற்போது ரூ .1,000 தள்ளுபடி பெறுவீர்கள். ஒரு சில வங்கி கார்டுகளில் சலுகைகளும், ரூ.8,450 வரை எக்ஸ்ச்செஞ் சலுகையும் உள்ளன. விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, மீடியா டெக் ஹீலியோ ஜி 70 SoC இதில் உள்ளது. இதில் சக்திவாய்ந்த சிப்செட் இருப்பதனால், தினசரி இயக்கியாக இதனைப் பயன்படுத்தும்போது எந்தவொரு சிக்கலையும் நீங்கள் காணமாட்டீர்கள்.
6.78 இன்ச் HD + டிஸ்ப்ளேவை இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 கொண்டுள்ளது. குவாட் பின்புற கேமரா அமைப்பில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உள்ளன. பிரத்தியேக குறைந்த ஒளி சென்சாரும் இதில் உள்ளது. 5,200 mAh பேட்டரி மற்றும் 18W வேகமான சார்ஜிங்கையும் இன்ஃபினிக்ஸ் மொபைல் ஆதரிக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம் 31s

அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா தளத்தில் சாம்சங் கேலக்ஸி எம் 31s ஸ்மார்ட்போன், ரூ.18,499 விலைக்குக் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளில் ரூ.1,500 உடனடி கேஷ்பேக் சாம்சங் அளிக்கிறது. பழைய தொலைபேசிக்கு பதிலாக ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்றும் இந்தத் தளங்கள் குறிப்பிடுகின்றன. மறுபுறம், எக்ஸ்ச்செஞ் சலுகையில் ரூ.16,500 வரை தள்ளுபடியை அமேசான் அளிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம் 31s, ரூ.19,499 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது அடிப்படை 6 ஜிபி RAM வெரியன்ட்டின் விலை.
இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் 6.5 இன்ச் முழு HD + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. எக்ஸினோஸ் 9611 SoC மற்றும் 25W சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரியையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது. குவாட் பின்புற கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை சோனி IMX682 சென்சார், 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் ஷூட்டர் ஆகியவை உள்ளன. 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டரும் இதில் உள்ளது. செல்ஃபி எடுக்க, 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
போக்கோ எக்ஸ்3

போக்கோ எக்ஸ்3, ரூ.16,999 விலைக்கு விற்கப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் வழியாக இந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், பழைய தொலைபேசியின் பரிமாற்றத்தில் ரூ.16,400 தள்ளுபடியையும் பெறலாம். MIUI 12 மூலம் போகோ எக்ஸ்3 இயங்குகிறது மற்றும் ஸ்னாப்டிராகன் 732G SoC கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் மற்றும் எச்டிஆர்10 சான்றிதழுடன் 6.67 அங்குல முழு HD + டிஸ்ப்ளேவை இந்த மொபைல் வழங்குகிறது. இது, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. பின்புற கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் சோனி IMX682 சென்சார், 119 டிகிரி அகல கோணம் வரையிலான 13 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை உள்ளன. முன்புறத்தில் 20 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக இந்த மொபைல் IP53 என மதிப்பிடப்பட்டுள்ளது. 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000 mAh பேட்டரி இதில் இருக்கிறது.
ஷியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

ஷியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ஃப்ளிப்கார்ட் வழியாக ரூ.16,386 விலையில் வாங்கலாம். இந்த சாதனத்திற்கு எக்ஸ்ச்செஞ் சலுகை எதுவும் இல்லை. EMI விருப்பங்கள் மற்றும் சில வங்கி கார்டு சலுகைகள் இதில் உள்ளன. 6.67 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720 SoC, மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,020mAh பேட்டரி ஆகியவற்றை ஷியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் கொண்டுள்ளது. குவாட் பின்புற கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல் பட சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை உள்ளன. மேலும், இவற்றோடு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் உள்ளது. முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”