Mobile Phone launch Tamil News: இந்த வாரம் ஏராளமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளன. ஒன்பிளஸ் 8 சீரிஸ், Mi10 மற்றும் பிற நிறுவனங்களின் இடைப்பட்ட பிரிவில் இருக்கும் மொபைல்களுக்கு எதிராக சாம்சங் தனது F20 எடிஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது. போகோ, கேமிங்கை மையமாகக் கொண்ட போகோ X3 பட்ஜெட் மொபைலை அறிமுகப்படுத்தியது. மோட்டோரோலா நுழைவு நிலை பட்ஜெட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. ரியல்மீ, நர்சோ (Narzo) சீரிஸில் மூன்று தொலைபேசிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. நோக்கியா பட்ஜெட் தொலைபேசி ஒன்றை மீண்டும் வெளியிட்டிருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி S20FE:
சாம்சங் கேலக்ஸி S20 FE, 6.5 இன்ச் அமோலேட் இன்பினிட்டி-ஓ (AMOLED Infinity-O) டிஸ்ப்ளேவுடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பித்த வீதத்துடன் வருகிறது. இது திரை தெளிவுத்திறன் 1080 × 2400 பிக்சல்கள் மற்றும் 20: 9 என்ற விகிதத்தைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில், முதன்மை 12MP கேமரா, 12MP (wide-angle) அகல-கோண கேமரா மற்றும் 8MP டெலிஃபோட்டோ (Telephoto) கேமரா ஆகிய 'ட்ரிபிள்' கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 32MP ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. மேலும், இது ஆப்டிகல் பட ஸ்டெபிலைசேஷன் (Stabilisation) மற்றும் 30x ஸ்பேஸ் ஜூம் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.
4,500 mAh பேட்டரி 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. வாட்டர் ரெசிஸ்டன்ட்டுக்கான IP68 மதிப்பீடும் இதில் உள்ளது. திரையில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. 6GB மற்றும் 8GB வேரியன்ட்டுகளைக் கொண்ட 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதி இதில் இருக்கிறது. 8GB வேரியன்ட்டில் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடனும் வருகிறது.
போக்கோ X3:
போக்கோ X3, டைனமிக் ஸ்விட்ச் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 அங்குல FHD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும், 240Hz-ன் higher-touch விகிதத்தையும் வழங்குகிறது. அட்ரினோ 618 GPU-உடன் கேமிங்-சென்ட்ரிக் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G ப்ராசசர் இதில் இருக்கிறது. மேலும், இதில் கூடுதல் LiquidCool டெக்னாலஜி 1.0 உள்ளது. இது, தொலைபேசி வெப்பமடைவதைத் தடுக்க உதவும். பின்புறத்தில், 64MP சோனி IMX 682 முதன்மை சென்சார், 119 டிகிரி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் 13MP கேமரா, 2MP டெலிமேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட குவாட் கேமரா இருக்கிறது. போக்கோ X3, 6,000 mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 6GB RAM 64GB ஸ்டோரேஜ் கொண்ட மொபைலின் விலை ரூ .16,999 மற்றும் 6GB RAM 128 GB ஸ்டோரேஜ் வசதிகொண்ட மொபைலின் விலை ரூ .18,499, 8 GB RAM 128 GB ஸ்டோரேஜ் கூடிய மொபைலின் விலை ரூ .19,999.
மோட்டோரோலா E7 பிளஸ்:
மோட்டோ E7 பிளஸ் 6.5 இன்ச் எச்டி + மேக்ஸ் விஷன் HD டிஸ்ப்ளே, 20: 9 விகிதத்துடன் வருகிறது. இந்த பட்ஜெட் தொலைபேசியை அட்ரினோ 610 GPU-யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 GB வரை விரிவாக்கக்கூடிய 4 GB RAM மற்றும் 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரே ஒரு கட்டமைப்பில் இது கிடைக்கிறது. பின்புறத்தில், இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதில், 48 MP முதன்மை கேமரா f/1.7 லென்ஸும், f/2.4 லென்ஸுடன் 2 MP இரண்டாம் சென்சாரும் அடங்கும். முன்பக்கத்தில், f/2.2 லென்ஸுடன் 8MP ஸ்னாப்பரைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
ரியல்மீ நர்சோ 20 சீரிஸ்:
ரியல்மீ நர்சோ 20A-வின் முக்கிய சிறப்பம்சம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசசர் மூலம் இயக்கப்படுவதுதான். 10W சார்ஜிங் கொண்ட 5,000 mAh பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரிவெர்ஸ் (reverse) சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. பின்புறத்தில், மூன்று கேமரா அமைப்பு உள்ளது. மேலும் இதில், 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே இருக்கிறது.
ரியல்மீ நர்சோ 20 ப்ரோ மின்னல் வேக 65W சூப்பர் டார்ட் (SuperDart) சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது வெறும் 38 நிமிடங்களில் முழு சார்ஜ் ஆகிறது. இது, கேமிங்கில் கவனம் செலுத்தும் மீடியாடெக் ஹீலியோ G95 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது கார்பன் ஃபைபர் கூலிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக் குளிரூட்டும் திறனை 8.6 சதவீதம் அதிகரிக்கிறது. இது 6.5 அங்குல முழு HD + டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 120 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் விகிதம் மற்றும் 480nits பிரகாசத்துடன் வருகிறது. இது 16MP முன் ஸ்னாப்பருக்காக பஞ்ச்-ஹோல் (punch-hole) கேமராவைக் கொண்டிருக்கிறது. பின்புறத்தில், 48MP AI குவாட் கேமரா, 119 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ், ரெட்ரோ போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 4MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. கைரேகை ஸ்கேனர் தொலைபேசியின் வலது பக்கத்தில் உள்ளது.
ரியல்மீ நர்சோ 20, 6,000 mAh பேட்டரி, கேமிங்கிற்கான ஹீலியோ G85 ப்ராசசர் மற்றும் 48MP முதன்மை கேமராவுடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. நாசோ 20, 45 நாட்கள் காத்திருப்பு நேரத்தை வழங்கும் என்று ரியல்மீ கூறுகிறது. சூப்பர் பவர்-சேவிங் பயன்முறையின் கீழ், ஒரே நேரத்தில் ஆறு செயலிகளை இயக்க முடியும். 18W வேகமான சார்ஜிங் மற்றும் ரிவெர்ஸ் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. 119 டிகிரி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ லென்ஸையும் இது கொண்டிருக்கிறது.
நோக்கியா 2.4 மற்றும் நோக்கியா 3.4 :
நோக்கியா 2.4, 6.5 இன்ச் HD ஸ்கிரீன் மீடியாடெக் P22 ப்ராசசர், 3GB RAM மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில், 13MP + 2MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் முன்புறத்தில் 5MP கேமராவும் உள்ளன. மைக்ரோ USB ஆதரவுடன் 4500 mAh பேட்டரி மூலம் இது இயக்கப்படுகிறது. மேலும், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், பின்புறத்தில் கைரேகை சென்சார், NFC மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
நோக்கியா 3.4, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 460 ப்ராசசரால் இயக்கப்படுகிறது. இது 4GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.39 இன்ச் HD + பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பின்புறத்தில், 13MP + 2MP + 5MP கேமராக்களுடன் மூன்று-கேமரா தொகுதி மற்றும் முன்பக்கத்தில் 8MP ஸ்னாப்பரைக் கொண்டிருக்கிறது. மேலும் இது, 4,000mAh பேட்டரி, டைப் C USB, இரட்டை நானோ சிம் ஸ்லாட்ஸ், மைக்ரோSD ஆதரவு மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.