Mobile phone News In Tamil: ஸ்மார்ட்போன்கள், மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இல்லையெனில், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகள் காரணமாக, நமக்கு இன்டர்நெட் மிக முக்கியமாக மாறியுள்ள நிலையில், அதன் வேகம் குறைவதால், நம்மால் அன்றாட பணிகளை சரிவர செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனைவராலும் இந்த நேரத்தில் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாது என்பதால், நம்மிடம் இருக்கும் போன்களில் சில செட்டிங்களை மட்டும் மாற்றி நாம் போனின் நெட் ஸ்பீடை அதிகரிக்கலாம்.
Clear the cached data
ஸ்மார்ட்போனில் ஒவ்வொரு செயலி இயக்கும்போதும் அதில் சில கேச்டு பைல்கள் சேகரம் ஆகும். இந்த கேச்டு பைல்கள் போனின் நினைவகப்பகுதியான ராமில் சேகரம் ஆகி, அதன் வேகத்தை கட்டுப்படுத்தும். அவ்வப்போது இந்த கேச்டு பைல்களை நாம் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதை நீக்குவதற்கு, Settings > Storage > Cache. என்ற வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
Disable animations
போனில் அனிமேசன் உள்ளிட்ட GIF பைல்களை பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அவை நமது டிஸ்பிளே சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சக்தியை விட அதிகமாக எடுத்துக்கொள்ளும் என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த அனிமேசன் வசதிய டிஸ்ஏபிள் செய்வதனால், போனின் வேகம் அதிகரிப்பதோடு, பேட்டரியின் ஆயுட்காலமும் கணிசமான அளவில் அதிகரிக்கும்.
அனிமேசன் வசதியை டிஸ்ஏபிள் செய்ய Settings > About Phone > Tap Build number until you see a pop-up intimating that Developer options have been enabled > Go back to the main Settings page > Open Developer options > Windows animation scale > Animations off என்ற வழிமுறையை பின்பற்றவும்.
Remove bloatware, unused apps
ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் புளோட்வேர்கள் உள்ளநிலையில், அதன் பயன்பாடு நமக்கு அதிகளவில் தேவைப்படாது. அதேபோல், நாம் இன்ஸ்டால் செய்த செயலிகளை சிலகாலம் பயன்படுத்திவிட்டு அதை அப்படியே போட்டு விட்டு விடுவோம். அது நம்முடைய போனில் குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொண்டிருக்கும். இதன்காரணமாக, நமது போனின் வேகம் குறையும்.இதனால், தேவையற்ற செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அதை தற்காலிகமாக டிஸ்ஏபிள் செய்துவிடலாம்.
Turn on Data Saver on Chrome
பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளர்கள் குரோம் பிரவுசரையே பயன்படுத்தி வருகின்றனர். எல்லா போன்களும் குரோம் பிரவுசருடனேயே வருகிறது. இந்த பிரவுசர் பயன்படுத்துபவர்கள், டேட்டா சேவர் வசதியை ஆன் செய்து வைத்தால் நமக்கு கிடைக்கும் தகவல்கள் 30 முதல் 50 சதவீத அளவிற்கு கம்ப்ரஸ்டு செய்து வருவதால், போனின் ராமில் போதிய இடம் இருப்பதால், போன், மற்றும் நெட் ஸ்பீட் அதிகரிக்கும்.
Do not use live wallpapers
போனின் டிஸ்பிளேயில், நீர் வீழ்ச்சி போன்ற இயங்கும் வகையிலான வால்பேப்பர்களை பயன்படுத்தும்போது போனின் சிபியு மற்றும் பேட்டரி தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது. இதன்காரணமாக போனில் மற்ற செயலிகளை பயன்படுத்தும்போது போனின் வேகம் குறைகிறது. போன் டிஸ்பிளேயில், லைவ் வால்பேப்பர்களுக்கு பதிலாக போட்டோக்களை பயன்படுத்துவதால், போனின் வேகம் அதிகரிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.