Mobile phone sanitizer machine, Samsung uv steriliser tamil news: வெளியே சென்று வீட்டிற்கு வந்தபின் ஒவ்வொரு முறையும் நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட்போனை கிருமி நீக்கம் செய்வதுதான் நம்மில் பலருக்கும் இப்போது முதன்மை வேலையாக இருக்கிறது. போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணி, தனியாகக் கிருமி நாசினி போன்றவையெல்லாம் இனி தேவையில்லை. அதற்குப் பதிலாக சாம்சங்கின் புதிய UV ஒளி ஸ்டெரிலைசேஷன் சாதனத்தைப் பயன்படுத்தலாம். இந்த லன்ச் பாக்ஸ் ஸ்டைல் சாதனத்தை உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்யும் போதும் பயன்படுத்தலாம்.
ஆனால் இந்த தீர்வு உண்மையில் பணத்திற்கு மதிப்புள்ளதா? சாம்சங்கின் யுவி ஸ்டெரிலைசர் பெட்டியை ஒரு வாரம் சோதித்த பிறகு அதற்கான விமர்சனம் இங்கே.
Samsung uv steriliser tamil news: சாம்சங் யுவி ஸ்டெரிலைசர்
சாம்சங்கின் யுவி ஸ்டெரிலைசர் பாக்ஸ் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, முதலில் UV-C கிருமி நீக்கம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.
சூரியனிலிருந்து வரும் அலைகளில் பரவுகின்ற ஒரு வகை மின்காந்த கதிர்வீச்சுதான் UV ஒளி அதாவது புற ஊதா ஒளி. இதனைச் சிறப்பு பல்புகள் மூலமாகச் செயற்கையாகவும் உருவாக்க முடியும். UV-A, UV-B, மற்றும் UV-C என மூன்று வகையான புற ஊதா கதிர்வீச்சுகள் உள்ளன. அவற்றில் UV-C மிகச்சிறிய அலைநீளங்களைக் கொண்டுள்ளது (180-280nm) மற்றும் நுண்ணிய உயிரினங்களை அழிப்பதில் சிறந்தது. இதனால்தான் UV-C, பல ஆண்டுகளாகக் கருத்தடை நோக்கங்களுக்காக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
சாம்சங் UV ஸ்டெரிலைசர் பாக்ஸ்
முதல் பார்வையில், சாம்சங்கின் UV ஸ்டெரிலைசர் பாக்ஸ், லன்ச் பாக்ஸ் எனத் தவறாகக் கருதப்படலாம். இது, க்ரீம் வெள்ளை நிறத்தில் வருகிறது மற்றும் எந்த ஃபோனுக்கும் பொருந்தும் அளவுக்கு பெரியது. மேலே மூடப்பட்டிருக்கும் மூடியைத் திறந்தால், புற ஊதா ஸ்டெரிலைசர் பெட்டியின் இடது மற்றும் வலது பக்கங்களில் புற ஊதா பல்புகள் உள்ளன. உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்ய, இந்த பாக்ஸின் மையத்தில் ஓர் வயர்லெஸ் சார்ஜர் உள்ளது. மேலும், இதில் ஒரு USB-C முதல் USB-A வரையிலான கேபிள்கள் உள்ளன. ஆனால், சுவர் சார்ஜர் சேர்க்கப்படவில்லை.
சுத்தம் செய்யப்படவேண்டிய ஸ்மார்ட்போனை பெட்டியின் உள்ளே வைத்து மூடவேண்டும். இப்போது போனை சுத்தம் செய்யத் தொடங்குகிறது. பிறகு, புற ஊதா ஒளி ஸ்டெரிலைசரின் வலது பக்கம் முன்னால் இருக்கும் வட்ட பட்டனை அழுத்த வேண்டும். பட்டனை அழுத்தும்போது, ஒற்றை பீப் சத்தமும் மற்றும் சுத்தம் செய்யும் செயல் தொடங்கியிருப்பதைக் குறிக்கும் பச்சை விளக்கு ஒளியும் தெரியும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஒளி அணைக்கப்பட்டு, செயல்முறை முடிந்துவிட்டதைக் குறிக்கும் வகையில் இரண்டு முறை பீப் ஒலிக்கும்.
Samsung UV steriliser with wireless charger review
புற ஊதா ஒளி பாக்டீரியாவைக் கொல்லுமா?
கோவிட்-19-க்கு எதிரான அதன் செயல்திறன் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், UV-C ஒளியைக் கிருமிநாசினி மற்றும் கருத்தடை செய்யப் பயன்படுத்தலாம். எஃப்.டி.ஏ (FDA (Food and Drug Administration)) கூட சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியது. MERS-ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக UV-C ஒளி பயனுள்ளதாக இருக்கிறது என்று தேசிய அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அகாடமிகள் நம்புகின்றன. இதற்கிடையில் UV ஒளி சானிடைசர், 99 சதவிகித பாக்டீரியாக்களைக் கொல்லும் என்று சாம்சங் கூறுகிறது.
Samsung UV Steriliser
சாம்சங் UV ஸ்டெரிலைசர் பாக்ஸ், வயர்லெஸ் சார்ஜராகவும் வேலை செய்கிறது
சாம்சங்கின் UV ஸ்டெரிலைசர் பாக்ஸை, வயர்லெஸ் சார்ஜராகவும் பயன்படுத்தலாம். இது ஓர் நல்ல அம்சம்தான், ஆனால் வயர்லெஸ் சார்ஜர் வேகமாகச் செயல்படாதது ஏமாற்றமே. மெதுவாக சார்ஜ் ஏறுவதற்கான காரணம், இந்த சாதனம் 10W வயர்லெஸ் சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கிறது என்பதால்தான். பெட்டியின் மூடியைத் திறந்து, தொலைபேசியை அதனுள் வைத்தால், Qi-சார்ஜர் வயர்லெஸ் உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்யத் தொடங்கும்.
UV Sterilizer by Samsung Review
நீங்கள் இதனை வாங்க வேண்டுமா?
ஸ்மார்ட்போன் கைகளில் இருக்கும்போது எப்போதும் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுடன் நீங்கள் இருப்பதாக உணருகிறீர்கள் என்றால், நிச்சயம் சாம்சங்கின் UV ஸ்டெரிலைசர் பாக்ஸ் வாங்கலாம். ஸ்மார்ட்வாட்ச், ஏர்பாட், ஸ்மார்ட்போன் மற்றும் சன்கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுடன் இந்த சாதனத்தை எளிதில் இணைத்துப் பயன்படுத்தலாம். UV ஸ்டெரிலைசர் பாக்ஸ் உண்மையில் செயல்படுகிறதா என்பதைக் கூறுவதற்கு எந்த வழியும் இல்லை என்றாலும், இந்த சாதனம் 99 சதவிகித கிருமிகளைக் கொல்லும் திறன் கொண்டது என்று சாம்சங் கூறுகிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.3,599.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"