ரூ 20,000 பட்ஜெட்டில் அசத்தும் ஸ்மார்ட்போன்கள்: உங்க சாய்ஸ் எது?

Best budget mobile phone under RS 20000: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள், புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் உங்களுக்காக இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Smartphone, Samusung, Xiaomi, Poco, best phones under Rs 20,000, best Rs 20,000 phones, best smartphones under Rs 20,000, Samsung Galaxy M31s, Poco X2, Realme 6 Pro, Redmi Note 9 Pro Max
Mobile Phone Tamil News

Mobile Phone Tamil News, Best budget mobile phone under RS 20000: மொபைல் போன், மனிதனின் 6வது புலனுறுப்பு என்று வாய்வார்த்தையாக சொல்லிவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு அதை உண்மையாக்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், எப்போதும் மொபைல்போனும், கையுமாகத்தான் திரிந்து கொண்டிருக்கிறார்கள். பேசுவது, கேம்கள் விளையாடுவது, வீடியோ கால்கள் பேசுவது, படங்கள் பார்ப்பது என பாதிப்பொழுதை மொபைல்போன்களுடனேயே செலவழித்து வருகின்றனர்.

Best budget mobile phone under RS 20,000: ரூ20000 விலையில் மொபைல் போன்

இந்நிலையில் ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள், புதிய வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் உங்களுக்காக இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Samsung Galaxy M31s

தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனம், சமீபத்தில் தனது கேலக்ஸி போன்கள் வரிசையில் கேலக்ஸி 31 எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 6 ஜிபி ராம் 258 ஜிபி ஸ்டோரேஜ் உடனான இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை பணிகள் முதல் மல்டி டாஸ்க் வரை இந்த போனில் எளிதாக செய்யும் வகையில், 6.5 இஞ்ச் திரை, 64 எம்பி குவட் கேமரா செட்அப், 6000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.

Poco X2

இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய வரவு இல்லை என்றாலும், ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள்ளாக கிடைக்கும் தரமான போன் ஆகும். பிளிப்கார்ட்டில் இந்த போனின் விலை ரூ.17,499 லிருந்து துவங்குகிறது. 20 எம்பி டுயல் முன்பக்க கேமரா, ஸ்னாப்டிராகன் 730, 8 ஜிபி வரை ராம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் 64 எம்பி குவாட் பின்பக்க கேமரா உள்ளிட்ட வசதிகள் மல்டி டாஸ்கிங்கிற்கு உதவுகிறது.

Redmi Note 9 Pro Max

ரெட்மீ நோட் 9 புரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, இந்திய மக்களிடையே மிகச்சிறந்த வரவேற்பு உள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரெட்மீ நோட் 9 புரோ மேக்ஸ் போன், 6 ஜிபி ராம் மாடல் ரூ. 16,999க்கு கிடைக்கிறது. இது மற்ற மாடல் போன்களை ஒப்பிடும்போது ரெக்டாங்குலர் கேமரா விதத்தால் மாறுபடுகிறது. எல்லாவிதமான ஒளியிலும் மிகச்சீறந்த முறையில் போட்டோ எடுப்பதால், போட்டோ பிரியர்களின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.64 எம்பி குவாட் முன்பக்க கேமரா, 32 எம்பி டிஸ்பிளே செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி. 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் உள்ளிட்டவைகள் இதில் உள்ளன.

Realme 6 Pro

90 ஹெர்ட்ஸ் திரை, 64 எம்பி குவாட் முன்பக்க கேமரா, ஸ்னாப்டிராகன் 720ஜி, டுயல் செல்பி கேமராக்கள், 30 வாட்ஸ் பிளாஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்வ இந்த போனின் அடிப்படை விலை ரூ.17,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mobile phone tamil news best budget mobile phone under 20000

Next Story
மொபைல் சார்ஜ் வேகமாக குறைகிறதா? ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசர்களுக்கு டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com