Advertisment

Oppo F17: பவர்ஃபுல் கேமரா, பக்காவான பேட்டரி... இதைவிட வேற என்ன வேண்டும்?

இது 7.48 மிமீ அடர்த்திகொண்ட மிகவும் ஸ்லிம் மாடல் மொபைல். இதன் எடை வெறும் 164 கிராம்தான். கைகளுக்கு அடக்கமாகவும் உபயோகிக்க மிகவும் எளிதாகவும் இருக்கும்.

author-image
WebDesk
New Update
Best pick mid range phone oppo f17 pro review

Best pick mid range phone oppo f17 pro review

Mobile Phone Tamil News, Oppo F17 Pro review: ஒப்போவின் மிகவும் பிரபலமான சீரிஸ் என்றால் அது F சீரிஸ்தான். கொரோனா பேண்டமிக்கைத் தொடர்ந்து தற்போது F சீரிஸில் F17 ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒப்போ. இந்த மொபைலில் வேறு என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

அடிப்படையில், F17 சீரிஸில் இரண்டு மொபைல்கள் உள்ளன. ஒன்று, 8+128GB உள்ளமைப்பில் மூன்று வண்ணங்களில் (மேஜிக் ப்ளூ, மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக்) 22,990 ரூபாய்க்கு கிடைக்கும் F17 ப்ரோ. மற்றொன்று 17,990 ரூபாயில் 6GB+128GB மற்றும் 19,990 ரூபாயில் 8GB+128GB என இரண்டு வேரியன்ட்டுகளில் வரும் F17.

இவற்றில் நாங்கள் சோதனை செய்துப் பார்த்தது மேஜிக் ப்ளூ F17 ப்ரோ மாடல். இது 7.48 மிமீ அடர்த்திகொண்ட மிகவும் ஸ்லிம் மாடல் மொபைல். இதன் எடை வெறும் 164 கிராம்தான். கைகளுக்கு அடக்கமாகவும் உபயோகிக்க மிகவும் எளிதாகவும் இருக்கும். பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவும், சிறிய வாலட்களில் வைத்துக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.

ஒப்போ F17 ப்ரோ மாடலில் 6.43 இன்ச் முழு HD +சூப்பர் AMOLED ஸ்க்ரீன் இருக்கிறது. இதனால், 90.7% ஸ்க்ரீன் பாக விகிதத்துடன் பார்ப்பதற்கு நல்ல அனுபவத்தை வழங்குகிறது. மினி டூயல்-பஞ்ச் ஹோல்களை டிஸ்ப்ளே பயன்படுத்துகிறது. இது தொழில்துறையின் மிகச்சிறிய (3.7மிமீ) கேமரா அளவைக்கொண்ட மொபைல் என்ற தனித்துவத்தைப் பெறுகிறது. மேலும் ஸ்க்ரீனில் In-Display கைரேகை பதிப்பு 3.0 இருக்கிறது. இது ஸ்க்ரீனை 0.3 வினாடிகளில் விரைவாகத் திறக்க வழிவகுக்கிறது.

உள்ளே, 2.2Ghz அளவுக்கு அதிகமான 8-Cores சிபியூ frequency கொண்ட ஒரு சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ P95 AI சிப்செட் இருக்கிறது. மேலும் இந்த மொபைல், 8 GB மெமரி மற்றும் 128 GB ஸ்டோரேஜையும் கொண்டுள்ளது. இதனை 3-கார்டு ஸ்லாட் மூலம் 256 GB வரை மேலும் நீட்டிக்க முடியும். ஒப்போவின் தனியுரிமை 30W VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 4.0 தொழில்நுட்பத்துடன்  தொலைப்பேசியில் 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. 5 நிமிட சார்ஜிங் வசதியுடன், நான்கு மணிநேரம் வரை F 17 ப்ரோ பயனர்கள் உபயோகப்படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, வெறும் 30 நிமிடங்களில் 74% சார்ஜையும், 53 நிமிடங்களில் முழு சார்ஜையும் இந்த மொபைல் போன்களில் ஏற்ற முடியும்.

ஆறு AI போர்ட்ரெயிட் (portrait) கேமராக்களின் தொகுப்புடன், F17 ப்ரோவில் எளிதில் பயன்படுத்தக்கூடிய போர்ட்ரெயிட் மோட் மற்றும் வீடியோ அம்சங்கள் உள்ளன. மொபைலின் பின்புறத்தில் 48 MP wide-angle quad-கேமரா அமைப்பு மற்றும் முன்னால் உள்ள இரட்டை டெப்த் கேமராக்கள் உள்ளிட்ட AI கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது இந்த கேமராவின் மற்றொரு சிறப்பம்சம்.

டூயல் லென்ஸ், 2 MP டெப்த் கேமரா மற்றும் 16 MP மெயின் ஃப்ரன்ட் கேமரா இரண்டையும் மென்பொருள் நிலைப்படச் செயலாக்கத்துடன் இணைத்து மிகவும் துல்லியமான புகைப்படம் எடுப்பதற்கு வழிவகுக்கிறது.

புத்தம் புதிய AI வழிமுறைகளால் இயக்கப்படும் F17 ப்ரோ, AI சூப்பர் க்ளியர் போர்ட்ரெய்ட்டை (AI Super Clear Portrait) அறிமுகப்படுத்துகிறது. இது AI facial reconstruction தொழில்நுட்பத்துடன் தெளிவான படங்கள் எடுப்பதற்கு உதவுகிறது. குறைந்த ஒளியிலும் சிறந்த உருவப்படங்களை எடுக்க ஏதுவாகவும் இருக்கிறது.

மொத்தத்தில் F17 ப்ரோ மொபைல் உபயோகிப்பதற்கு நன்றாக இருக்கிறது. நிறுவனம் உறுதியளித்த எல்லாவற்றையும் இது நிச்சயமாக வழங்குகிறது. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு, நல்ல கேமரா செயல்திறன், பெரிய டிஸ்பிளே, சிறந்த ஸ்பீக்கர், தரமான ஆடியோ, வேகமான சார்ஜிங் கொண்ட நீண்டு உழைக்கும் நல்ல பேட்டரி போன்றவற்றை கொண்ட சூப்பர் மொபைல் இந்த F17 ப்ரோ. நிச்சயமாக இடைப்பட்ட பிரிவினரின் சரியான தேர்வாக இது இருக்கும்.

Advertisment
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Mobile Phone Oppo India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment