சாம்சங், ரியல்மி, ரெட்மி… ரூ10,000 விலையில் ‘பக்கா’ போன்கள்!

Budget Mobile Phones under rs 10000: பட்ஜெட் விலையில் மார்க்கெட்டில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Mobile Phones under rs 10000

Mobile Phone Tamil News: கைக்கடிகாரம், மோதிரம், வளையல் போன்று தற்போதைய காலகட்டத்தில் மொபைலும் நம் கைகளின் ஓர் முக்கிய அணிகலனாகவே மாறிவிட்டது. அதிலும், குறைந்த விலையில், அனைத்து வசதிகளுடன் ஸ்மார்ட்ஃபோன் கிடைத்தால், விட்டுவைப்பார்களா என்ன! ஏகப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்கள் இந்தியச் சந்தையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், 10,000 ரூபாய் மதிப்பில், தரமான மொபைல் போன் கிடைப்பது அரிது.

முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு, தற்போதைய காலகட்டத்தில் வேலை மற்றும் பொழுதுபோக்கிற்காக மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், ஏராளமான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள், பேஸிக் மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் ரியல்மீ, புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும், ரெட்மி புதிய A மற்றும் நம்பர் சீரிஸ் சாதனங்களையும் அறிமுகப்படுத்தியது.

Budget Mobile Phones under rs 10000: பட்ஜெட் விலை செல்போன்கள்

படிப்பு, வேலை, பொழுதுபோக்கு என எல்லாவகையிலும் தரமான அதிலும் 10,000 ரூபாய் விலையில் மார்க்கெட்டில் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ரூ.9,999 விலையில் ரியல்மீ C15:

10,000 ரூபாயில் பல புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது ரியல்மீ. அவற்றில் சிறந்தது ரியல்மீ C15. இந்த ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் HD மற்றும் LCD டிஸ்ப்ளே 20: 9 என்ற விகிதத்துடன் வருகிறது. மேலும், மீடியாடெக் ஹீலியோ G35 ப்ராசசர் மூலம் 4 GB RAM மற்றும் 64 GB உள் சேமிப்பு வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. 3 GB RAM + 32 GB சேமிப்பு இடம் மற்றும் 4 GB RAM + 64 GB சேமிப்பு இடம் கொண்ட இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. கேமராவைப் பொறுத்தவரை, ரியல்மீ C 15 குவாட்-கேமரா அமைப்பில் 13MP முதன்மை சென்சார், 8 MP அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 MP மேக்ரோ லென்ஸ் மற்றும் நான்காவதாக B/W லென்ஸ் கொண்டுள்ளன. செல்ஃபிக்களுக்கு ரியல்மீ C 15, 8 MP செல்ஃபி ஷூட்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் பேட்டரி. இது, 6000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. விலையைப் பொருத்தவரை, 3 GB மாடலின் விலை ரூ.9,999 மற்றும் 4 GB மாடலின் விலை ரூ .10,999.

Redmi- Mobile Phones under rs 10,000

ரூ.8,999 விலையில் ரெட்மி 9:

6.53 அங்குல HD + டிஸ்ப்ளேயுடன் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் கொண்டிருக்கிறது இந்த ரெட்மி 9. மைக்ரோ SD கார்டு மூலம் 512 GB வரை சேமிப்பு இடத்தை விரிவாக்கக்கூடிய வசதிகளுடன் 4 GB RAM மற்றும் 128 GB உள் சேமிப்பு பகுதிகளோடும் மீடியா டெக் ஹீலியோ G35 ப்ராசசர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. கேமராவைப் பொறுத்தவரை, 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளிட்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி 9. செல்ஃபி எடுக்க 5MP சென்சார் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 10W சார்ஜிங்கிற்கான வசதிகளுடன் 5,000 mAh பேட்டரி மூலம் ரெட்மி 9 செயல்படுத்தப்படுகிறது. இதன் விலை, 4 GB RAM / 64 GB ஸ்டோரேஜ் மாடல் ரூ .8,999 மற்றும் 4 GB RAM / 128 GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.9,999.

ரூ. 7,999 விலையில் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 ப்ளஸ்:

இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ், 6.82 இன்ச் HD + ஸ்கிரீனுடன் 20.5:9 என்ற விகிதத்தைக் கொண்டு டிராப் நாட்ச் அம்சத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மீடியாடெக் ஹீலியோ A25 ப்ராசசர் மூலம் 3 GB RAM மற்றும் 32 GB உள் சேமிப்புப் பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ SD கார்டு வழியாக 256 GB வரை சேமிப்பு இடத்தை நீட்டிக்கச் செய்யலாம். இந்த இன்ஃபினிக்ஸ் போன் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட XOS 6.2 இயக்க முறையில் இயக்குகிறது. மேலும் 13 MP முதன்மை ரியர் சென்சார் மற்றும் செல்ஃபிக்கு 8 MP செல்ஃபி கேமரா ஆகியவை கொண்டிருக்கிறது. பின்புறத்திலும் ரியர் பேனல் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஒரே 3 GB RAM மாடலின் விலை ரூ. 7,999. பச்சை, ஊதா மற்றும் சாம்பல் ஆகிய மூன்று வண்ணங்களில் மார்க்கெட்டில் கிடைக்கிறது.

ரூ.9,999 விலையில் சாம்சங் கேலக்ஸி M01s:

நீங்கள் சாம்சங் பிராண்டின் ரசிகரா? கவலையே வேண்டாம்! சாம்சங் கேலக்ஸி M01s, தற்போது இந்தியாவில் ரூ.10,000-க்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது. கேலக்ஸி M01s, 6.2 இன்ச் முழு HD பிளஸ் TFT இன்ஃபினிட்டி V டிஸ்ப்ளேவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது 3 GB RAM மற்றும் 32 GB சேமிப்பு வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், மைக்ரோ SD கார்டு வழியாக 512 GB வரை சேமிப்பு இடத்தை விரிவாக்க முடியும். கேமராவைப் பொறுத்தவரை, சாம்சங் தொலைபேசியில் 13MP + 2MP இரட்டை ரியர் கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா ஆகியவை உள்ளன. இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி உள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட OneUI மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ .9,999 மட்டுமே.

ரூ.9,999 விலையில் டெக்னோ ஸ்பார்க் பவர் 2:

டெக்னோ ஸ்பார்க் பவர் 2, 4 GB RAM மற்றும் 64 GB சேமிப்பு இடம் கொண்ட ஒரே ஒரு வேரியன்ட்டில் வருகிறது. மைக்ரோ SD கார்டு வழியாக 256 GB வரை விரிவாக்கக்கூடிய வசதிகொண்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999. 7 அங்குல டிஸ்ப்ளேவுடன் திரையிலிருந்து உடல் விகிதத்தில் 90.6 சதவிகிதத்துடன் நிரம்பியிருக்கிறது. இது மீடியாடெக் ஹீலியோ P22 ப்ராசசர் மூலம் 4 GB RAM மற்றும் 64 GB உள் சேமிப்பு வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராவைப் பொறுத்தவரை, டெக்னோ சாதனம் குவாட் கேமராக்களுடன் 16 MP முதன்மை சென்சார் மற்றும் ஒரு செல்ஃபி கேமராவுடனும் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி உள்ளது.

ரூ .9,999 விலையில் ரெட்மி 9 பிரைம்:

ரெட்மி 9 பிரைம் 6.53 இன்ச் FHD + ஸ்க்ரீன் அமைப்புகளைக் கொண்டுள்ளது. இது மீடியாடெக் ஹீலியோ G80 ப்ராசசர் மற்றும் 4 GB RAM மற்றும் 128 GB உள் சேமிப்பு வசதிகளுடன் இயங்குகிறது. மேலும் இதில், 13MP AI முதன்மை கேமரா, 8MP இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 5MP போர்ட்ரைட் கேமரா ஆகியவை உள்ளன. செல்ஃபிகளுக்கு, 8MP AI முன் கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5020mAh பேட்டரியைக் கொண்டிருக்கிறது. அதோடு, 18W வேகமான சார்ஜ் ஏறுவதற்கு ஏதுவாக இருக்கிறது. 4 GB RAM + 64 GB ஸ்டோரேஜ் வசதிகளுடன் கூடிய இந்த ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனின் விலை ரூ .9,999 மற்றும் 4 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் வசதிகளுடையை போனின் விலை ரூ .11,999.

 

 

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mobile phone tamil news budget mobile phones under rs 10000 samsung redmi realme

Next Story
இதை கவனித்தீர்களா? பட்ஜெட் விலையில் முன்னணி நிறுவன ‘லேப்டாப்’கள்!budget laptops, laptops under Rs 40,000, budget Intel core i3 laptops in india, asus vivobook, hp i3 laptop, dell inspiron i3 laptop, lenovo ideapad i3
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com