Mobile Phone Tamil News, Google Pixel 4a vs Apple iPhone SE 2020: ஆப்பிள் ஐபோன் எஸ்இ மற்றும் ஒன்பிளஸ் நோர்டு போன்களுக்கு போட்டியாக, கூகுள் நிறுவனமும், புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான பிக்சல் 4ஏ அறிமுகப்படுத்தியுள்ளது. பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போன், தற்போதைய அளவில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.26,244 ஆக உள்ளது. இந்திய சந்தையிலும் இந்த போன் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போனின் விலையும், ஐபோன் எஸ்இ விலையும் கிட்டத்தட்ட ஒத்திருந்தாலும், இதில் அதிக வசதிகள் உள்ளதால், அமெரிக்காவில் ஐபோன் எஸ்இக்கு கடும்போட்டியாக பிக்சல் 4ஏ போன் விளங்கி வருகிறது.
Google Pixel 4a vs Apple iPhone SE 2020: கூகுள் பிக்சல் 4ஏ – ஐபோன் எஸ்இ 2020
கூகுள் பிக்சல் 4ஏ போனின் விலை (அமெரிக்காவில்) இந்திய மதிப்பில் ரூ.26,244 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் எப்போது அறிமுகம், விலை என்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஐபோன் எஸ்இ போனின் விலை 64 ஜிபி விலை இந்திய மதிப்பில் ரூ. 42,500, 128 ஜிபி விலை ரூ. 47,800 மற்றும் 256 ஜிபி விலை ரூ. 58,300 என்ற அளவில் உள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ – ஐபோன் எஸ்இ 2020 : டிசைன்
கூகுள் பிக்சல் 4 போனைப்போன்றே கூகுள் பிக்சல் 4ஏ போனும் உள்ளது. கூகுள் பிக்சல் 4 போனில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. போனின் முன்பக்கத்தில் 5.8 இஞ்ச் பஞ்ச் டிஸ்பிளே உள்ளது. பிக்சல் 4 போனை போன்றே முன்பக்கத்தில் சிங்கிள் கேமரா உள்ளது. அதுதவிர்த்து, போனின் பின்பக்கத்தில் டைட்டன் எம் பாதுகாப்புடன் கூடிய பிங்கர் பிரின்ட் சென்சார் உள்ளது. கூகுள் லோகோ கீழ்ப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த போனுடன் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 8யை ஒத்தே, ஐபோன் எஸ்இ போன் உள்ளது. ஆப்பிள் லோகா மையத்தில் உள்ளது. டச் ஐடி சென்சார் 4.7 இஞ்ச் டிஸ்பிளே இதில் உள்ளது, பிக்சல் போனில் இல்லாத சிறப்பம்சமாக மெட்டல் கிளாஸால் ஆன வடிமைப்பு இதில் உள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ – ஐபோன் எஸ்இ 2020 : டிஸ்பிளே
கூகுள் பிக்சல் 4ஏ போனில் 5.38 இஞ்ச் புல் ஹெச்டி ஓலெட் ஹோல் பஞ்ச் டிஸ்பிளே உள்ளது இதில் HDR+ வசதியும் உள்ளது.
ஐபோன் எஸ்இ போனில் 4.7 இஞ்ச் ரெட்டினா ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வித் 1334*750 பிக்சல் ரெசலுசன், டால்பி விசன், ஹெச்டிஆர் 10, ட்ரு டோன் மற்றும் ஹாப்டிக் டச் சப்போர்ட் உள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ – ஐபோன் எஸ்இ 2020 : புராசசர் அண்ட் யுசர் இன்டர்பேஸ்
கூகுள் பிக்சல் 4ஏ போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி புராசசர், 6 ஜிபி ராம், 128 ஜிபி ஸ்டோரேஜ். ஆண்ட்ராய்டு 10 ஆபரேடிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அப்டேட் செய்துகொள்ளலாம்.
ஐபோன் எஸ்இ போனில் ஏ13 பயோனிக் சிப்செட், iOS 13.5.1 operating system உள்ளது.

கூகுள் பிக்சல் 4ஏ – ஐபோன் எஸ்இ 2020 : கேமராக்கள்
கூகுள் பிக்சல் 4ஏ போனின் பின்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமராவும், முன்பக்கத்தில் 8எம்பி வைட் ஆங்கிள் செல்பி கேமரா உள்ளது.
ஐபோன் எஸ்இ போனில், 12 எம்பி சென்சார் உடன் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேசன், முன்புறத்தில் 7 எம்பி செல்பி கேமரா உள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ – ஐபோன் எஸ்இ 2020 : பேட்டரி
கூகுள் பிக்சல் 4ஏ போனில் 3140 மெகாஹெர்ட்ஸ் பேட்டரியுடன் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.
ஐபோன் எஸ்இ போனில், 1821 மெகாஹெர்ட்ஸ் பேட்டரியுடன் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil