Mobile Phone Tamil News, Best budget phones: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அலுவலகங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி அளித்துள்ளன. இந்நிலையில் வீட்டிலேயே பொழுதுபோக்கவும், ஆன்லைன் நிகழ்ச்சிகளை பார்க்கவும் நல்ல மொபைல்போன்கள் கைவசம் இருப்பது அவசியமாகிறது.
ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், இந்த கொரோனா காலத்தை பயன்படுத்தி வாரந்தோறும் புதுப்புது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பட்ஜெட்டிற்குள்ளாக, சிறந்த போன்களை பட்டியலிட்டுள்ளோம்.
Mobile Phones under rs 15000, Best budget phones: பெஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ15,000 விலை
POCO M2 Pro
2020 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், 4 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.13,999க்கும், 6 ஜிபி ராம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.14,999க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் மூலம் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ள முடியும். 6.67 இஞ்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே, 2400* 1080 ஸ்கிரீன் ரெசொலுசன் உள்ளது. 5 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் பேட்டரி வித் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் புராசசர்ர. அட்ரீனோ 618 ஜிபியு உள்ளது. 16 எம்பி இமேஜ் சென்சாருடனான முன்பக்க கேமரா, 48 எம்பி பிரைமரி இமேஜ் சென்சாருடனான 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ் 2 எம்பி டெப்த் சென்சார் உள்ளது.
Realme 6i
Realme 6i ஸ்மார்ட்போன் ஜூலை மாதத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4ஜிபி ராம் கொண்ட போனின் விலை ரூ.12,999 ஆகவும், 6 ஜிபி ராம் கொண்ட போனின் விலை ரூ. 14,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெமரி கார்டின் உதவியுடன் 256 ஜிபி வரை ஸ்டோரேஜை நீட்டித்துக்கொள்ள முடியும். 6.5 இஞ்ச் டிஸ்பிளே , மீடியாடெக் ஹீலியோ ஜி90 டி புராசசர், மொபைல் கேம்ஸ் பிரியர்களுக்கு உன்னதமான அனுபவத்தை தரும். 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது. 48 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி 119 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ லென்ஸ், பிளாக் அண்ட் ஒயிட் போர்ட்ரயிட் லென்ஸ், 16 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.
Redmi Note 9 Pro
2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த போன், 6 ஜிபி ராம் உடன் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான போனின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.67 இஞ்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிரான் 720 ஜி புராசசர், கேம்ஸ் பிரியர்களுக்கு உன்னத அனுபவத்தை தருகிறது. 48 எம்பி பின்பக்க கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 16 எம்பி முன்பக்க கேமரா, 5,020 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது.
Samsung M21
சாம்சங் நிறுவனத்தின் இந்த போன். 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ( மெமரி கார்டின் உதவியுடன் 512 ஜிபி வரை நீட்டிக்கலாம்) விலை ரூ.13,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 6.4 இஞ்ச் புல் ஹெச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வித் இன்பினிட்டி யு கட், 20 எம்பி முன்பக்க கேமரா, 48 எம்பி டிரிபிள் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு 5 எம்பி டெப்த் கேமரா, எக்ஸினோஸ் 9611 புராசசர், 6 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் பேட்டரி வித் 15 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜருடன் வருகிறது.
Vivo Y30
4 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரோன் உடனான போனின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி வரை நீட்டிக்கலாம். 13 எம்பி, 8 எம்பி 2எம்பி, 2 எம்பி என 4 கேமராக்கள் உள்ளன. 6.47 இஞ்ச் புல் ஹெச்டி பிளஸ் டிஸ்பிள ே, 1560 *720 பிக்சல்ஸ் ரெசலுசன், 8 எம்பி முன்பக்க கேமராசல மீடியாடெக் ஹீலியோ பி 35 ஆக்டா கோர் புராசசர், 5 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் பேட்டரி உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.