/tamil-ie/media/media_files/uploads/2020/10/smartphonelaunches.jpg)
Smartphone launching in India this week tamil news
Mobile Phone Tamil News, New Model Mobile Phones With Price: இந்த வாரம் ஏராளமான புதிய ஸ்மார்ட்போன்கள் களமிறங்க உள்ளன. ஸ்மார்ட்போன்களை மிட்-ரேஞ்ச் பிரிவில் அல்லது ஃபிளாக்ஷிப்பில் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ள புதிய தயாரிப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டும். அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட முக்கிய இ-காமர்ஸ் தளங்களில் தொடங்கும் பண்டிகை விற்பனையைக் கருத்தில் கொண்டு இந்த தொலைபேசிகளில் சில சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.
ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ்
கோவிட்-19 தொற்றுநோயால் ஒரு மாதம் தாமதமாகிவிட்ட ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் பற்றிய அறிவிப்பு, அக்டோபர் 13-ம் தேதி விர்ச்சுவல் நிகழ்வில் குபெர்டினோ மூலம் அறிவிக்கப்படும். 5.4-இன்ச், 6.1-இன்ச் மற்றும் 6.7-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் இந்த சீரிஸ் போன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5.4 இன்ச் மற்றும் 6.1 இன்ச் அளவுகள் நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களாக இருக்கும். தற்போது சந்தையில் கிடைக்கும் பெரிய திரை தொலைபேசிகளுடன் ஒப்பிடும்போது சிறிய அளவிலான தொலைபேசியைத் தேடுவோருக்கு ஐபோன் 12 மினி சரியான சாய்சாக இருக்கும். ப்ரோ பாடல் போன்கள், 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் அளவுகளில் வரும். கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபாட் ஏரில் இருக்கும் புதிய A14 பயோனிக் சிப், வரவிருக்கும் அனைத்து தொலைபேசிகளிலும் பொருத்தப்பட்டிருக்கும். இந்த போன்களின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.51,237 முதல் 87,888 ரூபாய் வரை இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/iPhone-12-mm-300x167.jpg)
பிக்சல் 4a
கூகுளின் பிக்சல் 4a இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் ஃப்ளிப்கார்ட்டில் வரவிருக்கும் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக அக்டோபர் 16-ம் தேதி வெளியாகவுள்ளது. 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியன்டின் இதன் அறிமுக விலை ரூ.29,999. உலகம் முழுவதும் 'ஜஸ்ட் பிளாக்' வண்ணத்தில் மட்டுமே இந்த மொபைல் கிடைக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Pixel-4a-5-300x224.jpg)
5.81 இன்ச் டச்ஸ்க்ரீன் OLED டிஸ்ப்ளேவுடன் 19.5: 9 என்ற விகிதத்தில் 1080 × 2340 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் பிக்சல் 4a வருகிறது. மேலும், நிலையான 60Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. அட்ரினோ 618 GPU-யுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி சிப்செட்டால் (chipset) இந்த மொபைல் இயக்கப்படுகிறது. எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆண்ட்ராய்டு 11 பொருத்தப்பட்டிருக்கிறது. பின்புறத்தில், சிங்கிள் 12.2MP கேமரா மற்றும் 8MP முன் ஸ்னாப்பர் உள்ளது. இவை அனைத்தும் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 3,140 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன.
விவோ வி20
விவோ வி20 இந்த வாரம் களமிறங்கும் மற்றொரு மிட் ரேஞ்சர் மொபைல். இதில், 2400 × 1080 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.44 இன்ச் AMOLED dull HD + டிஸ்ப்ளே இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்கக்கூடிய அட்ரினோ 618 GPU, 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராசசர் மூலம் இந்த மொபைல் இயக்கப்படும். விவோவின் சொந்த ஃபன்டச் (Funtouch) OS 11 இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் 33W அதிவேக சார்ஜிங் ஆதரவுடன் 4,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன. பின்புறத்தில், 64 MP முதன்மை கேமராவுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. மேலும், 44 MP முன் ஸ்னாப்பர் வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் வைக்கப்பட்டிருக்கிறது. செல்ஃபி கேமராவின் செயல்திறன் இந்த தொலைபேசியின் முக்கிய மையமாக இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/vivo-v20-1-300x167.jpg)
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 FE
சாம்சங்கின் முதன்மை எஸ் 20 தொடரின் பட்ஜெட் பதிப்புதான் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 20 FE. எஸ் 20 சீரிஸின் பளபளப்பான ஃபினிஷிற்கு பதிலாக பாலிகார்பனேட் ஃபினிஷ் கொண்ட பல வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக இந்த தொலைபேசி அக்டோபர் 16-ம் தேதி இந்திய சந்தையில் களமிறங்கும். 8 ஜிபி + 128 ஜிபி என ஒரேயொரு வேரியன்டின் இந்த மொபைலின் விலை ரூ.49,999. மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை சேமிப்பு இடத்தை விரிவாக்கிக்கொள்ளலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Galaxy-S20-FE-3-300x215.jpg)
6.5 இன்ச் முழு HD + சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளே 20: 9 விகிதம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் இந்த போன் வருகிறது.எக்ஸினோஸ் 990 ப்ராசசர் கொண்டுள்ளது. பின்புறத்தில், 12MP முதன்மை கேமராவுடன் 12MP அகல-கோண கேமரா மற்றும் 8MP டெலிஃபோட்டோ கேமரா என ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில், 8MP ஷூட்டர் உள்ளது. 4,500 mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் எஸ் 20 FE ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
ஒன்ப்ளஸ் 8T
இந்த ஆண்டு ஒன்ப்ளஸ் 8T-ல் எந்த ப்ரோ மாடலும் இருக்காது. ஒன்ப்ளஸ் 8T-ன் விலை ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம். 65W வார்ப் சார்ஜ் தொழில்நுட்பத்தை ஒன்ப்ளஸ் 8T கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்ப்ளஸ் 8T-யின் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு இருக்கும். HDR 10+ மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 இன்ச் fluid AMOLED டிஸ்ப்ளேவை இந்த சாதனம் கொண்டிருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசசர் மற்றும் அண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இதன் விர்ச்சுவல் வெளியீடு அக்டோபர் 14-ம் தேதிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதன்மை தயாரிப்பு குறித்த கூடுதல் விவரங்கள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/OnePlus-8t-main-300x167.jpg)
Mi 10T சீரிஸ்
ஏற்கெனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi 10T சீரிஸ் அக்டோபர் 15-ம் தேதி இந்தியாவுக்கும் வரவிருக்கிறது. இந்திய மற்றும் உலகளாவிய மாறுபாட்டின் விவரக்குறிப்புகள் வேறுபடவில்லை என்றால், Mi 10T ப்ரோ 6.67 இன்ச் IPS LCD டிஸ்ப்ளே முழு HD + தெளிவுத்திறன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதம் பயன்பாட்டாளர்களை ஈர்க்கும். 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி உள் சேமிப்புடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ப்ராசசர் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இவை அனைத்தும் 5,000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இது, ஷியோமி முதன்மை சாதனத்தின் மிகப்பெரிய பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Mi10Tseries-300x167.jpg)
பின்புறத்தில், Optical Image Stabilisation-உடன் (OIS) 108MP முதன்மை சென்சார், 13MP அகல-கோண சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸுடன் ட்ரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், 20 MP செல்ஃபி கேமரா இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.