Mobile Phone Tamil News, Budget Mobiles under 15,000: கடந்த சில மாதங்களில் பட்ஜெட் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட பல ஸ்மார்ட்போன்கள் மற்ற நிறுவனங்களின் தொலைபேசிகளின் விலையை விட 1.5 மடங்கு அதிகரித்துள்ளன. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் பண்டிகைக்கால விற்பனை வருவதால், பலர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க எதிர்பார்க்கின்றனர். ரூ.15,000-க்கும் கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில், ஒரு சில புதிய போட்டியாளர்கள் வந்துள்ளனர். இந்த விலையில் நீங்கள் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான ஆப்ஷன்ஸ் இதோ.
ரெட்மி நோட் 9 ப்ரோ
இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோ ரூ.13,999-க்கு கிடைக்கிறது. விற்பனையின் போது, 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூ.15,999-க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் ரூ.16,999 விலையிலும் கிடைக்கும். 6.67 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. கேமிங்கிற்கு ஏதுவான குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G ப்ராசசர் இதில் உள்ளது. பின்புறத்தில், 48MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா, 5MP மேக்ரோ கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. செல்ஃபிக்களுக்கு 16MP கேமரா உள்ளது. மேலும், 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,020 mAh பேட்டரி மூலம் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கப்படுகிறது.
போக்கோ M2 ப்ரோ
போக்கோ M2 ப்ரோவின் அடிப்படை வேரியன்ட்டான 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விலை 13,999 ரூபாய்க்கும், 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM வேரியன்ட் ஸ்மார்ட்போன் 14,999 ரூபாய்க்கும் கிடைக்கும். 6 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட்டின் விலை ரூ.16,999. ஆனால் வரும் நாட்களில் இந்த விலை குறையக்கூடும். போகோ M2 ப்ரோவில் சேமிப்பு மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளலாம். இதில் 2400 × 1080 பிக்சல் ஸ்க்ரீன் தெளிவுத்திறனுடன் 6.67 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. 5,000 mAh பேட்டரி கொண்டு 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி ப்ராசசருடன் அட்ரினோ 618 GPU இணைக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த மொபைல் கேமிங்க்கு மிகவும் சிறந்தது. முன்பக்கத்தில் 16MP கேமரா உள்ளது. பின்புற பேனலில், 48MP முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. மேலும், முதன்மை 48MP பட சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவையும் இதில் இருக்கின்றன.
ரியல்மீ நார்சோ 20 ப்ரோ
நார்சோ சீரிஸின் முதல் ப்ரோ வேரியன்ட்தான் இந்த ரியல்மீ நார்சோ 20 ப்ரோ. மீடியா டெக் ஹீலியோ ஜி 95 ப்ராசசர் கொண்டு கேமிங் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டிருக்கிறது இந்த ரியல்மீ மொபைல். 6 ஜிபி + 64 ஜிபி வேரியன்ட் மொபைல் ரூ.14,999 விலையில் கிடைக்கும். மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை சேமிப்பு இடத்தை விரிவாக்கிக்கொள்ளலாம். 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த நார்சோ 20 ப்ரோ, 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்தையும் 120 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் டச் விகிதத்தையும் கொண்டுள்ளது. பின்புறத்தில், 48MP AI குவாட் கேமரா, 119 டிகிரி அல்ட்ரா வைட் லென்ஸ், ரெட்ரோ போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 4MP மேக்ரோ கேமரா ஆகியவற்றுடன் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 16MP முன் கேமராவையும் கொண்டிருக்கிறது. தொலைபேசியின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் உள்ளது. மேலும் இது மிக விரைவான 65W சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500 mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது.
சாம்சங் M21
கேமிங்கில் அதிகம் இல்லாத உள்ளடக்க பயன்பாட்டாளர்களுக்கு இந்த சாம்சங் M21 ஸ்மார்ட்போன் சிறந்த சாய்ஸ். 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் முழு HD + டிஸ்ப்ளேவுடன் தரமான 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 48MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 5MP டெப்த் கேமராவுடன் பின்புறத்தில் ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 20MP கேமரா இருக்கிறது. உட்புறத்தில், 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட எக்ஸினோஸ் 9611 ப்ராசசர் உள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் இதன் விலை ரூ.13,999. 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட உயர் வேரியன்ட் ரூ.15,999-க்கு கிடைக்கிறது. இந்த விலை பின்வரும் நாட்களில் குறையக்கூடும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் அதன் 6,000 mAh பேட்டரிதான்.
ரியல்மீ 7
நார்சோ 20 ப்ரோவின் அதே மீடியாடெக் ஹீலியோ ஜி 95 ப்ராசசர், 6 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை ரியல்மீ 7 சாத்தானும் கொண்டிருக்கிறது. இந்த வேரியன்ட்டின் அடிப்படை விலை ரூ.14,999. மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக சேமிப்பு 256 ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளலாம். 48MP முதன்மை கேமராவுடன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 16MP முன் ஸ்னாப்பர் உள்ளது. 6.5 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் இந்த மொபைல் வருகிறது. இவை அனைத்தும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.