லியோ
* காலையில் கைபேசி நம்மை எழுப்ப, எழுந்து காலைக்கடனை முடித்து உடற்பயிற்சி செய்து உணவு உண்டு அலுவலகம் சென்று வீடு திரும்பும் வரை எல்லாம் இயந்திரமாய் மாறிவிட்ட காலத்தில், நாளுக்கு நாள் இயந்திரத்தின் ஆளுமை அதிகரித்து கொண்டுத்தான் வருகிறது. தனிமனித நலன் முதல் நாட்டின் நலன் வரை எல்லாம் அதை நம்பி மட்டுமே உள்ளது. இந்த வளர்ச்சியால் நமக்கு சிறிதளவு பாதிப்பு உண்டு என்றபோதும் அதன் தேவை அவசியமானதே.
தற்கால விஞ்ஞானத்தின் உச்சமாக தற்போது விர்ஜின் என்ற நிறுவனம் அதன் தலைமையின் கீழ் துபாயில் 'ஹைப்பர் லூப்' (Hyper Loop) என்று ஒரு புதிய அதிவேக பயண முறையை கட்டமைக்க உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் பல. ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்க்கும் நீண்ட நெடும் பாலங்களும் அதில் மிதக்கும் நீள குடுவைகளையும் போன்ற தோற்றம் உடைய இது. மணிக்கு சுமார் 1220 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது இயற்கை வாய்வுகளை கொண்டு இயங்கும் என்பது இதன் சிறப்பம்சம். 8அடி உயரமும் குறிப்பிடத்தக்க அகலமும் கொண்ட இவ்வகை ஊர்திகள் தற்போது இந்தியாவிலும் அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக புனே முதல் மும்பை வரையிலான ஹைபெர்லூப் அமையவிருப்பதாக தகல்வல்கள் கூறுகின்றன.
* நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது நம் நினைவிற்கு வருவது ரோபோக்கள். ஹாங்காங் நகரத்தை தலைமையக கொண்ட 'ஹான்சன் ரோபோடிக்ஸ்' என்ற நிறுவனம் ஏப்ரல் மாதம் 2015 ஆம் ஆண்டு 'சோபியா' என்ற சுயமாக சிந்திக்கக் கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். நாம் கேட்கும் கேள்விகளுக்கு சுயமாய் சிந்தித்து பதிலளிக்கக் கூடிய மனிதனை போன்ற உருவம் கொண்ட முதல் ஹுமனோய்ட் ரோபோ இதுவே. இன்றளவும் இந்த ரோபோவில் புது புது மாறுதல் கொண்டுவரப்படுகிறது. ஆய்வின் முடிவில் இந்த ரோபோவை நாட்டின் பாதுகாப்பிற்கு வழங்க உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
பீரங்கிகளையே தாக்கும் துப்பாகிகள், மிக சிறிய இடத்திலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள், நீர்முழ்கி கப்பல்கள், கண்களுக்கு தெரியாத போர்விமானங்கள் என்று விஞ்ஞானத்தின் அதிசயம் நீள்கிறது. ஹிரோஷிமா நாகசக்கிக்கு பின் ஆணு குண்டு ஆயுதம் கொண்ட போர்முறை முடிவிற்கு வந்தது, ஆனாலும் இன்றளவும் புதிய அணுஆயுதங்களை பல மேற்கொண்டு வருகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையே.
கூகுள் நிறுவனம் அனுதினமும் புது புது கண்டுபிடிப்புகள் கொண்ட நிறுவனமாக மாறிவிட்டது நாம் அறிந்ததே. தானாக இயங்கும் மிதிவண்டி முதல் ஜி.பி.ஸ் எனப்படும் வழிகாட்டி வரை எல்லாம் புதுமையே. தற்போது அந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் வி.பி.ஸ் (Virtual Private Server) எனப்படும் புதிய வழிகாட்டும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வி.பி.ஸ் உங்கள் கைபேசியின் கேமரா வழியாக நீங்கள் தேர்வு செய்த பாதையை காட்டவல்லது.
அதிலும் பெண்களை கவரும் வகையில் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் தங்களுக்கு வழிகாட்டுவது போலவும் அமைக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படி அனுதினம் நாம் வாழும் வாழ்கை விஞ்ஞானத்தை நம்பி மட்டுமே உள்ளதாக மாறிவிட்டது.
இவ்வித விஞ்ஞான மாற்றங்கள் நம்மை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்க கூடியவை என்பதை நாம் நன்கு அறிவோம். ஆயினும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கூற்றின்படி மாற்றத்தை வரவேற்று அதனுடன் நாமும் நலமுடன் பயணிக்க பழகிக்கொள்ள வேண்டும்.