Advertisment

Hongqi L5: வியக்க வைக்கும் சீன அதிபர் காரின் சிறப்பம்சங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
modi xi jinping summit mamallapuram china president car specifications hongqi l5 - வியக்க வைக்கும் சீன அதிபர் காரின் சிறப்பம்சங்கள்

modi xi jinping summit mamallapuram china president car specifications hongqi l5 - வியக்க வைக்கும் சீன அதிபர் காரின் சிறப்பம்சங்கள்

பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையிலான சந்திப்பு, மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஏர் இந்தியா கார்கோ விமானத்தில் புல்லட் புரூப் வசதி கொண்ட, நான்கு கார்கள் சீனாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரின் குறைந்தபட்ச விலையும் ஏறக்குறைய 6 கோடி ரூபாயாகும்.

Advertisment

சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது. 'ஹாங்கி' என்பதற்கு சீன மொழியில் 'சிவப்புக் கொடி' என்று பொருள்.

பெரும்பாலும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் Hongqi L5 என்ற மாடல் கார்களையே பயன்படுத்துவார். ஆப்ரிக்க பயணத்தின் போது Hongqi N501 என்ற மாடல் காரையும் அவர் பயன்படுத்தி இருக்கிறார். Hongqi நிறுவனம் அரசாங்க பயன்பாடு, அணிவகுப்பு பயன்பாடு மற்றும் சாமானிய மக்களுக்கான கார் என்று 3 வகைகளில் கார்களை தயாரித்து வருகிறது. பார்ப்பதற்கு பழங்காலத்து கார் போல் காட்சியளித்தாலும் இந்திய குடியரசு தலைவர் பயன்படுத்தும் Mercedes-Maybach S600 PULLMAN GUARDஐ விட வலிமையான அளவு மற்றும் எடையிலும் பெரிய காராக இது உள்ளது.

ஷி ஜிங்பிங் பயன்படுத்தும் Hongqi L5 கார் தான் சீனாவின் விலை உயர்ந்த கார். Bentley Mulsanne, Rolls-Royce Ghost கார்களுக்கு இணையானது. அதிபர்களின் பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிக கனமான கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு கருதி, இந்த காரின் சிறப்புகளில் பெரும்பாலானவை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கார் என்ஜின், திறன் போன்ற சில விஷயங்கள் மட்டுமே வெளி உலகிற்கு தெரியும்.

10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் இதில் உள்ளது.

Hongqi L5 Car Model Hongqi L5 Car Model

இந்திய குடியரசு தலைவர் பயன்படுத்தும் Mercedes-Maybach S600 PULLMAN GUARD காரை விட, சீன அதிபரின் கார் ஒன்றேகால் அடி நீளம் அதிகம். உயரத்தில், இந்திய குடியரசு தலைவரின் கார் 5.24 அடி என்ற நிலையில், சீன அதிபரின் கார் 5 அடி உயரம் கொண்டது.

எடையை பொறுத்தவரை Mercedes-Maybach S600 PULLMAN GUARD 2 ஆயிரத்து 390 கிலோ, சீன அதிபரின் Hongqi L5 3 ஆயிரத்து 150 கிலோ எடை கொண்டது. 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இந்திய குடியரசு தலைவரின் கார் 9 நொடிகள் எடுத்து கொள்ளும் நிலையில் சீன அதிபரின் கார் 8 நொடிகள் மட்டுமே எடுத்து கொள்ளும். இந்த வகை கார்களில் எரிபொருள் கொள்ளளவு மிக முக்கியம். Mercedes-Maybach S600 PULLMAN GUARD 80 லிட்டரும், Hongqi L5, 105 லிட்டர் எரி பொருள் கொள்ளளவையும் கொண்டுள்ளது. இந்த வகை கார்கள் அதிகபட்சமாக, லிட்டருக்கு 2 கிலோமீட்டர் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

Xi Jinping
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment