பல ஆண்டுகளாக பூமியில் இருக்கும் நிலவு இப்போது மெதுவாக பூமியை விட்டு நகர்ந்து செல்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குழு, பூமியிலிருந்து நிலவு படிப்படியாக விட்டு நகர்வது குறிப்பிடத்தக்க தாக்கங்களைக் ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு செய்தது.
பூமியிலிருந்து நிலவு ஆண்டுக்கு சுமார் 3.8 சென்டிமீட்டர் அளவில் நகர்ந்து செல்கிறது. இது பூமியின் ஒரு நாள் நேரத்தை நீடிக்கிறது என்று ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இறுதியில், இது 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணிநேரம் ஆகும் என்று கூறியது. 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் வெறும் 18 மணி நேரமாக இருந்தது என்றும் ஆய்வு கூறியது.
இந்த நிகழ்வு முதன்மையாக பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை தொடர்புகளுக்குக் காரணமாகும் என்கின்றனர்.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், "நிலவு விலகிச் செல்லும்போது, பூமி ஒரு சுழலும் ஃபிகர் ஸ்கேட்டரைப் போன்றது, பூமி மெதுவாக சுழன்று பூமி நாட்களை நீட்டிக்கிறது என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“