நிலாவின் கிரீப், மரியா ஆகியவை நிலா தோன்றி, இந்த நிலையை அடைவதற்கு காரணமாகின்றன என ஆய்வு கூறுகிறது.
நிலா நமது பூமி கோளிற்கு இயற்கையாக அமைந்த ஒரு செயற்கைகோளாகும். பூமிக்கு மிக அருகில் உள்ளது. மனிதன் கால் பதித்த கூடுதலான நிலப்பரப்பு நிலவு மட்டுமே. நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் நிலவைப்பற்றி உள்ளது. அதில் ஒன்றுதான் அது சமச்சீரற்றதாக உள்ளது என்பதாகும். எனினும், நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை நிலா, ஏன் சமச்சீரற்றதாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கிறது. நிலா, பூமியுடன் அலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. நாம் நிலவின் ஒரு புறத்தை மட்டுமே பார்க்க முடியும், அது அருகில் இருக்கும் பக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. பூமியை பார்த்துக்கொண்டிருக்கும் பக்கம் எப்போதும் தூரத்தில் உள்ள பக்கத்திலிருந்து மாறுபட்டது, அது எப்போதும், பூமிக்கு அப்பால் உள்ளது.
நிலவில், பூமிக்கு அருகில் உள்ள பக்கத்தில் கருப்பாக உள்ள பகுதிகள் லூனார் மரியா என்று அழைக்கப்படும். அவை பள்ளங்கள் அல்லது எரிமலை கூறுகள் என்று நம்பப்படுகிறது. தூரத்தில் உள்ள பக்கமும், அருகில் உள்ள பக்கத்தைபோன்றே இருக்கும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். 1950ம் இறுதியில், 1960களின் துவக்கத்தில் சோவியத் யூனியன் நடத்திய விண்வெளி ஆய்வில், தூரத்தில் உள்ள பக்கத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்ட பாதியளவு படங்கள் அங்கு மரியாவே இல்லை என்பதை காட்டியது.
பூமிக்கு அருகில் இருக்கும் பக்கத்தில் உள்ள 31 சதவீத மரியா பகுதியுடன் ஒப்பிடும்போது, பூமியில் இருந்து தூரத்தில் உள்ள பக்கத்தில் 1 சதவீத மரியாவே உள்ளது. இந்த சமச்சீரற்ற தன்மை நிலா ஏன் எப்படி உருவானது என்பதற்கான குறிப்புகளை வழங்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் சந்தேகிக்கின்றனர்.
டோக்கியோ தொழில்நுட்ப மையத்தில் உள்ள, பூமி – வாழ்க்கை அறிவியல் மையம், ப்ளோரிடா பல்கலைக்கழகம், கார்னகி அறிவியல் மையம், டாவ்சன் பல்கலைக்கழகம், நாசா ஜான்சன் விண்வெளி மையம் மற்றும் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிவியல் அறிஞர்கள் சேர்ந்து செய்யும் ஆராய்ச்சியில், அவர்கள் கவனித்தது, ஆய்வக ஆராய்ச்சிகள் மற்றும் கம்ப்யூட்டர் மாதிரிகள் மூலம் நிலா எப்படி பூமிக்கு அருகில் உள்ள பக்கம் மற்றும் தூரத்தில் உள்ள பக்கம் இரண்டிலும் சமச்சீரற்ற தன்மையை பெற்றது என்பதற்கு சில குறிப்புகள் கிடைத்துள்ளன.
நாசாவின் அப்போலோ பணிகள் நிலவில் 382 கிலோ பாறைகள் உள்ளது என்ற முடிவை கொண்டுவந்தபோது, நிலவின் கரும்பகுதிக்கு, இந்த பாறைகள் நிலவில் ஆங்காங்கு இருப்பதும், அதன் எரிமலை நிலைக்கும் அதுவே காரணம் என்றும் அறிவியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். அவர்கள் மரியாவுடன் தொடர்புடைய புது வகையான பாறைகளையும் கண்டுபிடித்துள்ளனர். அவை கிரீப்(KREEP) என்று அழைக்கப்படுகின்றன.
அந்த பாறைகளில் பொட்டாசியம் அதிகமுள்ளதால், அதன் அறிவியல் அடையாளமான K, அரிதான பூமி கூறுகள் (rare earth element) என்பதன் சுருக்கமாக REE மற்றும் பாஸ்பரசின் அறிவியல் அடையாளமான P ஆகியவற்றை சேர்த்து KREEP (கிரீப்) என்று குறிப்பிடப்படுகிறது. அதில் யுரேனியம், தோரியம் போன்ற கூறுகளும் உள்ளன. அவற்றின் கதிரியக்கமே அங்கு வெப்பத்தை உருவாக்குகிறது. நிலவின் உட்புறம் உள்ள வெப்ப மாதிரி கூறுவது என்னவென்றால், இந்த கூறுகளின் கதிரியக்கமே நிலவின், பூமிக்கு அருகில் இருக்கும் பக்கத்திற்கு வெப்பத்தை பல பில்லியன் ஆண்டுகளுக்கு வழங்கியிருக்க வேண்டும். அதுவே இப்பகுதியின் எரிமலை தன்மைக்கும் காரணமாக இருக்கலாம் மற்றும் நிலவின் சமச்சீரற்ற தன்மைக்கும் காரணமாக இருக்கலாம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
எனினும், ஏன் எரிமலைத்தன்மை மற்றும் கிரீப் ஆகியவை இருபுறங்களிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது என்பதை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடிக்க வேண்டும். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை சுற்றி தியா எனப்படும் செவ்வாய் கிரக அளவில் அதன் பாகம் விழுந்தபோது அநேகமாக நிலா எவ்வாறு உருவானது என்பதன் விளைவாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நாம் அனுப்பும் குப்பைகளும் விண்வெளியில் உலவுவதாலும் ஏற்படலாம்.
நிலவின் துவக்க கால வரலாற்றில் இந்த எரிமலை குழம்பு இடம்பெயர்ந்து, நிலா உருவான காலத்தில் ஏற்பட்ட தடைகள் மற்றும் நிலவில் எந்த வரிசையில் மாற்றங்கள் நடைபெற்றன என்றும் ஆய்வு கூடுதலாக நமக்கு தெரிவிக்கிறது.
மண் அரிப்பு முறையில் உள்ள குறைபாட்டால், நிலவின் மேற்பரப்பின் புவியியல் நிகழ்வுகளை சூரிய குடும்பத்தின் துவக்க கால வரலாற்றில் இருந்து பதிவு செய்வதாக ஜப்பானின் பூமி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மத்தேயு லானேவில்லி கூறுகிறார்.
குறிப்பாக, நிலவின், பூமிக்கு அருகில் உள்ள பக்கங்களில் உள்ள பகுதிகளில் மற்ற எந்த பகுதிகளையும்விட கதிரியக்க கூறுகளான தோரியம் மற்றும் யுரேனியம் போன்றவை அதிகம் உள்ளன. இந்த யுரேனியம் மற்றும் தோரியம் ஆகியவற்றின் தோற்றம் குறித்து புரிந்துகொள்வதே, நிலா உருவாகிய துவக்க காலத்தில் இருந்த படிநிலைகள், பிரச்னைகள் பூமியின் நிலை ஆகியவற்றை விளக்க உதவுகிறது என்று லானேவில்லி கூறுகிறார்.
நிலாவின் கிரீப், மரியா ஆகியவை நிலா தோன்றி, இந்த நிலையை அடைவதற்கு காரணமாகின்றன என ஆய்வு கூறுகிறது. சமச்சீரற்ற, தானாவே பெருக்கிக்கொள்கிற செயல்முறைகள், சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற நிலாக்களிலும் இருப்பது, இதற்கான ஆதாரமாகும் என்று லானேவில்லி கருதுகிறார். அவை இந்த பிரபஞ்சம் முழுவதும் அனைத்து இடத்திலும் இருக்கும் பாறைகளால் இருக்கலாம்.
தமிழில் : R. பிரியதர்சினி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.