Advertisment

நிலவில் நேரம் கணக்கிடுவது எப்படி? இது ஏன் முக்கியமானது?

விண்கலம் தரையிறக்கங்களைத் துல்லியமாகக் குறிப்பிடுவதற்கு துல்லியமான நேரம் முக்கியமானதாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
moon2

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவில் நேரத்தை அளவிடுவதற்கான ஒரு நிலையான வழியை உருவாக்க முயற்சிகள் நடந்து வருகின்றன, இது சந்திர மேற்பரப்பில் சர்வதேச செயல்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Advertisment

பல்வேறு நாடுகள் இப்போது நிலவு திட்டத்தை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் நிலவில் துல்லியமான மற்றும் நிலையான நேரம் அளவிடுவது முக்கியமானதாக உள்ளது. 

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி (என்ஐஎஸ்டி) ஆராய்ச்சியாளர்கள் பிஜுநாத் பட்லா மற்றும் நீல் ஆஷ்பி ஆகியோரின் சமீபத்திய ஆய்வு, பூமியுடன் ஒப்பிடும்போது சந்திரனில் நேரம் எவ்வாறு வித்தியாசமாக செயல்படுகிறது என்பதை ஆராய்ந்தது.

சந்திரனில் உள்ள கடிகாரங்கள் பூமியில் உள்ளதை விட ஒவ்வொரு நாளும் 56 மைக்ரோ விநாடிகள் வேகமாக இயங்குகிறது என்று கண்டறிந்தனர். இந்த வேறுபாடு இரண்டு முக்கிய காரணங்களுக்காக நிகழ்கிறது: சந்திரனின் பலவீனமான ஈர்ப்பு கடிகாரங்களை வேகமாக சுழல செய்கிறது, அதே நேரத்தில் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் அதன் இயக்கம் அவற்றை சிறிது குறைக்கிறது.

Advertisment
Advertisement

56 மைக்ரோ விநாடிகள் போன்ற சிறிய வித்தியாசம் கூட ஒவ்வொரு நாளும் 17 கிலோமீட்டர்கள் வரை வழிசெலுத்தல் தவறுகளுக்கு வழிவகுக்கும் என்று பாட்லா விளக்கினார்.

நிலவு நேரம் ஏன் முக்கியமானது? 

விண்வெளி வீரர்கள், ரோவர்கள் மற்றும் தரையிறங்குபவர்கள் தங்கள் நிலைகளை 10 மீட்டருக்குள் துல்லியமாக சுட்டிக்காட்ட வேண்டும் . இதன் அர்த்தம், சிறிய நேரப் பிழைகளும், கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். நிலவில் எல்லாம் சீராகச் செல்ல துல்லியமான நேரக் கட்டுப்பாடு அவசியம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment