/indian-express-tamil/media/media_files/0jF0Z93CaGX3oCDfZunX.jpg)
ஏர்டெல், ஜியோ, வி.ஐ நிறுவனத்தின் குறைந்த விலை மற்றும் விலை உயர்த்தப்பட்ட புதிய மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்துப் பார்ப்போம். இந்த நிறுவனங்கள் 25% வரை தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி உள்ளன. இந்த புதிய விலை உயர்வு ஜூலை 3-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜியோ ரூ.199 திட்டம்
ஜியோவின் குறைந்த விலை மாதாந்திர ரீசார்ஜ் திட்டம் ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு 28 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ. 155 ஆக இருந்த திட்டம் தற்போது ரூ.199 ஆக உள்ளது. இந்த திட்டம் முழு காலத்திற்கும் அன்லிமிடெட் காலிங் வசதி, 300 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் அதிக மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தாதவர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பொருத்தமானது.
ஏர்டெல் ரூ.199 திட்டம்
ஏர்டெல் அதன் மிகவும் குறைந்த விலை மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ரூ. 179-ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால், பலன்கள் ஒரே மாதிரியாக உள்ளது, அன்லிமிடெட் காலிங் வசதி, 2 ஜிபி 4ஜி டேட்டா முழு காலத்திற்கும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது.
வோடபோன் ஐடியா ரூ.199 திட்டம்
Vi இன் மிகவும் குறைந்த விலை மாதாந்திர ரீசார்ஜ் திட்டமும் ரூ. 199 ஆகும், மேலும் பலன்கள் ஜியோவைப் போலவே இருக்கும், 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகிறது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.