மோட்டோ இ13 ஸ்மாட்போன் புதிய வெரியன்ட்டில் அசத்தலாக மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ், 5000mAh பேட்டரி என அட்டகாசமான அம்சங்களையும் வழங்குகிறது.
மோட்டோ இ13 சிறப்பம்சங்கள்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய புதிய Moto E13 வெரியன்ட் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8,999 விலையில் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
மற்ற ஸ்மார்ட்போன் OEMகள் ரூ.10,000க்கு 5G ஸ்மார்ட் போன் வழங்கத் தொடங்கியுள்ள நிலையில், மோட்டோரோலா இன்னும் அதை அறிமுகம் செய்யவில்லை. Moto E13 ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவை வழங்குகிறது. 5ஜி ஆதரவு வழங்கவில்லை.
இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் ஐ.பி.எஸ் எல்.சி.டி டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான டியர் டிராப்-ஸ்டைல் நாட்ச் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இன் டோன்-டவுன் வெர்ஷன் கொண்டுள்ளது.
Moto E13 பின்புறத்தில் 13-மெகாபிக்சல் AI-இயங்கும் கேமரா அமைப்பு மற்றும் 5-மெகாபிக்சல் முன்பக்க கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கேமரா ஆப்ஷனில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், ஃபேஸ் பியூட்டி மற்றும் போர்ட்ரெய்ட் மோட் போன்ற AI ஆதரவு அம்சங்கள் உள்ளன. இது Unisoc T606 octa-core சிப்செட் மற்றும் 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. போன் தொகுப்பில் USB-A முதல் USB-C கேபிள் கொண்ட 10W சார்ஜர் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/