/indian-express-tamil/media/media_files/2025/10/04/moto-g06-power-2025-10-04-14-52-20.jpg)
7,000mAh பேட்டரி அசுரன், 50MP கேமரா... மோட்டோரோலாவின் தீபாவளி ட்ரீட்! பட்ஜெட்டில் பவர் ஹவுஸ்!
மோட்டோரோலா நிறுவனம் அதன் "பவர்" சிரீஸின் புதிய வரவாக மோட்டோ G06 பவர் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தச் சாதனம், அதன் பிரமாண்டமான பேட்டரி மற்றும் சில கவனிக்கத்தக்க அம்சங்களுடன், பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கத் தயாராக உள்ளது.
மோட்டோ G06 பவரின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் 7,000mAh திறன் கொண்ட பேட்டரிதான். சராசரி பயன்பாட்டில் 2 நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்ட இந்த பேட்டரி, தொடர்ச்சியாக அதிக நேரம் கேம் விளையாடுபவர்களுக்கும், வீடியோ பார்ப்பவர்களுக்கும் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும். இந்த பிரம்மாண்ட பேட்டரியை சார்ஜ் செய்ய, இதில் 18W வயர்டு (Wired) சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் போன் 6.88-இன்ச் எல்.சி.டி தொடுதிரையைக் கொண்டுள்ளது. இது 720x1640 பிக்சல் ரெசொல்யூஷன் இருந்தாலும், 120Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh Rate) ஆதரிப்பது இந்த விலைப் பிரிவில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதனால், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் மிகவும் ஸ்மூத் ஆகவும்(smooth) வேகமாகவும் இருக்கும்.
மோட்டோ G06 பவரின் செயல்பாட்டிற்கு மீடியாடெக் Helio G81 Ultra SoC செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அன்றாடப் பயன்பாடுகள் மற்றும் மிதமான கேமிங் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டது. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப 4GB, 8GB ரேம் மற்றும் 64GB, 128GB, 256GB சேமிப்பகத் தேர்வுகளில் இது கிடைக்கும். கேமராவைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 50 MP பிரதான கேமரா, செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்புறத்தில் 8 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோ G06 பவரில் கூகிள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 16-ஐ ஜூன் மாதத்திலேயே வெளியிட்டுள்ள நிலையில், Android 15 இயங்குதளத்துடன் வெளியாகிறது. இருப்பினும், மோட்டோரோலாவின் வழக்கமான சுத்தமான (Near-Stock) ஆண்ட்ராய்டு அனுபவம், கூடுதல் மென்பொருள் அப்டேட்களுடன் (bloatware) இல்லாமல், பயனர்களுக்கு வேகமான மற்றும் எளிமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய பேட்டரி, 120Hz திரை மற்றும் 50 MP கேமரா போன்ற அம்சங்களுடன், மோட்டோ G06 பவர் பட்ஜெட் விலை வரம்பில் உள்ள ரெட்மி (Redmi), ரியல்மி (Realme) போன்ற நிறுவனங்களின் மாடல்களுக்குக் கடுமையான போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பேட்டரி நீடித்து உழைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியாவில் இதன் விலை மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.