மோட்டோ ஜி34 5ஜி ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Redmi 11C மற்றும் Samsung Galaxy M14 போன்ற மற்ற பட்ஜெட் 5G போன்களுக்குப் போட்டியாக களமிறங்கி உள்ளது. மோட்டோ ஜி34 120Hz புதுப்பிப்பு விகிதம், ஸ்னாப்டிராகன் 695 SoC ப்ராசஸர், 50 மெகாபிக்சல் டூயல் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு வசதிகளை போன் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி34 சிறப்பம்சங்கள்
மோட்டோ ஜி34 5ஜி ஆனது 720 x 1600 பிக்சல்கள் கொண்ட 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
டிஸ்ப்ளே 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 240Hz டச் சாம்லிங் ரேட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. மேலும் 580nits என்ற அளவில் peak brightness கொண்டுள்ளது.
பேனலில் பாண்டா கிளாஸின் கூடுதலான பாதுகாப்பு அடுக்கு உள்ளது. மோட்டோ ஜி34 ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் அதிகபட்சமாக 8GB RAM உடன் வருகிறது. இதை 16GB வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
இது பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் போனாக இருக்கும். பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு மற்றும்
16-மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. f/2.4 அபெர்ச்சரைக் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி34 விலை
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கூடிய மோட்டோ ஜி34 5ஜியின் அடிப்படை மாடல் விலை ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் டாப்-எண்ட் மாறுபாடு - 8ஜிபி ரேம் + 128ஜிபி சேமிப்பு - ரூ.11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மோட்டோரோலா பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.1,000 வழங்குகிறது, இதன் மூலம் விலை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.10,999 ஆக குறைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக், ஐஸ் ப்ளூ மற்றும் ஓஷன் கிரீன் வண்ணங்களில் வழங்கப்படுகிறது.
ஜனவரி 17 முதல், Moto G34 5G ஆனது Flipkart ஆன்லைன் தளத்தில் வாங்கி கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“