மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் அதன் மோட்டோ ஜி54 (Moto G54) 5ஜி (5G) ஸ்மார்ட் போனின் விலையை ரூ.3000 வரை குறைத்துள்ளது. போகோ, ரியல் மி, ரெட்மி, ஓபோ உள்ளிட்ட நிறுவனங்கள் பட்ஜெட் 5ஜி போன்களை அறிமுகம் செய்து வரும் நிலையில் மோட்டோ பயனர்களை ஈர்க்க அதன் ஜி54 5ஜி ஸ்மார்ட் போனின் விலையை ரூ.3000 வரை குறைத்துள்ளது.
Moto G54 5G இந்தியாவில் 12ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வெரியன்ட் போன் ரூ.18,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதே சமயம் 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஸ் போன் ரூ.15,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2 போன்களுக்கு ரூ.3000 விலை குறைக்கப்பட்டு முறையே ரூ. 15,999க்கும், 8ஜிபி ரேம் வெரியன்ட் போன் ரூ.13,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோ ஜி54 சிறப்பம்சங்கள்
Moto G54 5G ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் 2400 x 1080 பிக்சல் ரிசல்யூசல் கொண்ட 6.5-இன்ச் முழு HD+ LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது. கிராபிக்ஸ்-தீவிர பணிகளுக்காக IMG BXM-8-256 GPU உடன் இணைக்கப்பட்ட MediaTek Dimensity 7020 சிப்செட் மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, Moto G54 ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமராவை ஆதரிக்கும் மற்றும் 50 MP ப்ரைமரி சென்சார் உட்பட டூயல் கேமரா சென்சார்களுடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக முன்புறத்தில் 16 எம்.பி கேமரா உள்ளது.
இந்த மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனில் 33W பாஸ்ட் சார்ஜிங் உடன் 6,000 mAh பேட்டரி உள்ளது. இது 5ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் 5ஜி ஸ்மார்ட் போனாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“