இந்தியாவில் களம் இறங்கிய மோட்டோ ஜி6... யூசர்களை கவர இத்தனை அம்சங்களா?

ஜி6 மார்ட்ஃபோனில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மோட்டோ ஜி6 நேற்று(4.6.18) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

மோட்டோ ஜி6 மற்றும் ஜி6 பிளே ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் கடந்த 4 ஆம் தேதி வெளியிடப்பட்டன. அன்றைய நாள் முதல் இந்தியாவில் இருக்கும் ஃபோன் பிரியர்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் குறித்த எதிர்ப்பார்ப்பு பெருமளவில் அதிகரித்தன. இந்நிலையில் நேற்று இரவு இந்தியாவில் மோட்டோ ஜி6 ஸ்மர்ட்ஃபோன் விற்பனைக்கு வந்தது.

தற்சமயம் இந்த ஃபோன் அமேசான் இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளத்திலும் வெளியாகியுள்ளன. நிறங்களை பொருத்தவரையில் இண்டிகோ பிளாக் மற்றும் ஃபைன் கோல்டு ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கின்றது.

மேலும், பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் எஸ்டிஎஃப் வங்கி கிரேடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துவோர்க்கு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போன் இண்டிகோ பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் மாடல் ரூ.13,999 என்றும், 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் விலை ரூ.15,999 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி6 சிறப்பம்சங்கள்:

யூசர்களின் தேவையை உணர்ந்து முக்கியமான பல சிறப்பமசங்கள் மோட்டோ ஜி6 ஸ்மார்ட்போனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிஸ்பிளேவை பொருத்தவரையில் 5.7 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே.மெமரியை தாண்டி அதை கூடுதலாக நீட்டிக்கும் வசதி.

இதர அம்சங்கள்:

1. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
2. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசசர்
3. 32 ஜிபி மெமரி ஸ்பேஸ்
4. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
5. டூயல் சிம் ஸ்லாட்
6. 12 எம்பி + 5 எம்பி இரட்டை பின்பக்க கேமரா வித் எல்இடி ஃபிளாஷ்
7. 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்,
8. விரல்ரேகை சென்சார்
9. P2i வாட்டர்-ரெப்பலன்ட் நானோ கோட்டிங்
10. 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

மோட்டோரோலாவின் 15W வேகமாக சார்ஜ் செய்யும். கேமரா திறனை சோதிக்க காலை, மாலை நேரங்களில் மோட்டோ ஜி6 மார்ட்ஃபோனில் எடுக்கப்பட்ட பிரத்யேக புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

moto G6

moto G6

 

 

Moto G6

Moto G6

×Close
×Close