scorecardresearch

ஒரே நாளில் நான்கு மோட்டோ போன்கள் அறிமுகம்… விலை என்ன தெரியுமா ?

மோட்டோ ஜி7 பவர் போனின் பேட்டரி பேக்கப் 5,000 mAh ஆகும். மற்ற மூன்று போன்களும் 3000 mAh செயல்திறன் கொண்டதாகும்.

Moto G7 Series Smartphones launch
Moto G7 Series Smartphones launch

Moto G7 Series Smartphones : இன்று ப்ரேசில் நாட்டில் மோட்டோவின் ஜி7, ஜி7 ப்ளஸ், ஜி7 ப்ளே மற்றும் ஜி7 பவர் ஆகிய போன்கள் அறிமுகமாக உள்ளன.

இந்திய நேரப்படி இன்று மாலை 5:30 நடைபெறும் இந்த போனின் அறிமுக விழாவினை மோட்டோவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் நேரலையாக காணலாம்.

மோட்டோரோலா என்ற முகநூல் பக்கதில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இந்த விழாவை காணலாம். அதே போல் மோட்டோரோலா ப்ரேசில் @MotorolaBR என்ற ட்விட்டர் பக்கத்திலும் இதை காணலாம்.

இணையத்தில் பார்க்க விரும்பினால் உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துவிட்டு இந்த விழாவை காணலாம்.

Moto G7 Series Smartphones சிறப்பம்சங்கள்

நான்கு போன்களும் ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்கக்கூடியவை. ஜி7 மற்றும் ஜி7 ப்ளஸ் என்று இரண்டு போன்கள் வாட்டர் ட்ராம் ஸ்டைல் நோட்ச்சுடன் வெளியாகிறது. மற்ற இரண்டு போன்களும் ரெக்டாங்குலர் நோட்சினை பெற்றுள்ளது.

புதிய சீரியஸ்ஸின் ஜி7 மற்றும் ஜி7 ப்ளஸ் இரண்டு போன்களும் பேஸ் ரெகக்னைசிங்கை சப்போர்ட் செய்கிறது. நான்கு போன்களிலும் ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார், போனின் பின்புறத்தில் இருக்கும் மோட்டோ லோகோவில் இணைக்கப்பட்டிருக்கிறது.

மோட்டோரோலா ஜி7 ப்ளஸ் போன் ஸ்நாப்ட்ராகன் 636 ப்ரோசசரில் இயங்கும். மற்ற மூன்று போன்களும் ஸ்நாப்ட்ராகன் 632 ப்ரோசசரில் இயங்குகிறது.

மோட்டோ ஜி7 பவர் போனின் பேட்டரி பேக்கப் 5,000 mAh ஆகும். மற்ற மூன்று போன்களும் 3000 mAh செயல்திறன் கொண்டதாகும்.

Moto G7 Series Smartphones விலை

இந்த சீரியஸில் வெளியாகும் ஜி7 போனின் விலை – 300 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 24,400).  ஜி7 பிளேயின் விலை – 149 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 12,100)

ஜி7 பவர் போனின் விலை – 209 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூபாய் 17,000)

மோட்டோ ஜி7 பவர் போனின் விலை 360 யூரோக்கள் ஆகும். (இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 29,300 )

மேலும் படிக்க : தொடர்ந்து கேமிங் சீரியஸ்ஸிலும் முத்திரை  பதிக்க திட்டமிடும் சியோமி

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Moto g7 series smartphones launch how to watch live stream