Tech News Today in India: ஆப்பிள் பாட்காஸ்ட் அப்டேட், மோட்டோ ரேஸ்ர் 40 விலை குறைப்பு, ஃபாசில் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பை நிறுத்துவதாக அறிவிப்பு. இந்த நிகழ்வுகள் குறித்து இன்றைய டெக் நியூஸில் பார்ப்போம்.
ஆப்பிள் ஐபோனில் ஆட்டோ டிரான்ஸ்கிரிப்ஷன்
ஐ.ஓ.எஸ் 17.4 software அப்டேட் உடன் ஆப்பிள் ஐபோனில் வரும் பாட்காஸ்ட்களில் ஆட்டோ ஜெனரேட்டட் டிரான்ஸ்கிரிப்ஷன் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. பாட்காஸ்ட் மற்றும் டிரான்ஸ்கிரிப்ட் ஜெனரேஷன்
வெளியிடுவதில் சிறிது தாமதம் ஏற்படும், இருப்பினும், போட்காஸ்ட் எடிட் செய்யப்பட்டால் (டைனமிக் இன்செர்ஷனைப் பயன்படுத்தி) மாறிய போட்காஸ்டின் பகுதிக்கான டிரான்ஸ்கிரிப்டுகளை ஆப்பிள் காண்பிக்காது.
மோட்டோ ரேஸ்ர் 40
மோட்டோ ரேஸ்ர் 40 (Motorola Razr 40) மிகவும் குறைந்த விலை ஃபிளிப்-ஸ்டைல் ஃபோல்டபிள் ஸ்மார்ட் போன் ஆகும். இந்நிலையில் மேட்டோரோலா நிறுவனம் போன் விலையை குறைந்துள்ளது. அமேசானில் ரூ.44,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 SoC-ல் இயக்கப்படுகிறது. 4,200 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஃபிளிப்-ஸ்டைல் போனாகும். மேலும் 144Hz refresh rate டிஸ்பிளே கொண்டுள்ளது.
ஃபாசில் நிறுவன அறிவிப்பு
ஃபாசில் நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பை நிறுவனதாக அறிவித்துள்ளது. ஜென் 6 ஸ்மார்ட் வாட்ச் அதன் கடைசி தயாரிப்பு ஸ்மார்ட் வாட்ச் ஆகும் என்றும் அறிவித்துள்ளது. ஃபாசில் WearOS-ல் இயக்கும் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“