இந்தியாவில் அறிமுகமான மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்ஃபோன்

இந்த மொபைலின் விலை ரூ.34,999 நிர்ணியிக்கப்பட்டுள்ளது

ஃபோன் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகமாகியுள்ளது.

இன்றைய உலகில் ஸ்மார்ஃபோன்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் வெளிவரும் ஸ்மார்ஃபோன்கள் புது புது தொழில்நுட்பத்துடன் வெளிவருகின்றன. அந்த வகையில், பல நாட்களாக மொபைல் சந்தையில் வெளிவரவிருந்த மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ஃபோன் இந்திய சந்தையில் விலைக்கு வந்துள்ளது.

ஷட்டர்ஷீல்ட் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த ஃபோனில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய சந்தையில் இந்த மொபைலின் விலை ரூ.34,999 நிர்ணியிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ இசெட்2 ஃபோர்ஸ் ஸ்மார்ஃபோனின்    முக்கிய அம்சங்கள் :

*5.5-இன்ச் முழு எச்டி ட்ஸ்பிளே

*2560 x 1440 பிக்சல்

*ஸ்னாப்டிராகன் 835

*ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

*6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி ஸ்பேஸ்

*12 டூயல் எம்பி கேமரா

*4கே தரத்தில் வீடியோ பதிவு

*5மெகாபிக்சல் செல்பி கேமரா

*3490எம்ஏஎச் பேட்டரி

 

×Close
×Close