மோட்டோவின் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்: இன்று அறிமுகமாகிறது

Moto Z3, Motorola One Power, Moto One சிறப்பம்சங்கள், விலை, மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ள !

மோட்டோவின் புதிய போன்கள் இன்று சிக்காகோவில் அறிமுகமாகின்றது. Moto Z3, Motorola One Power, Moto One இந்த மூன்று போன்களையும் அறிமுகம் செய்து வைக்க திட்டமிட்டிருக்கிறது மோட்டோ நிறுவனம்.

மோட்டோவின் தலைமை அலுவலகம் இருக்கும் சிக்காகோவில் நடைபெற உள்ளது இந்நிகழ்வு. இது குறித்த வீடியோவினை மோட்டோ தன்னுடைய YouTube பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மோட்டோ Z3 ( Moto Z3 ), மோட்டோரோலோ ஒன் ( Motorola One ), மற்றும் மோட்டோரோலோ ஒன் பவர் என்ற ( Motorola One Power ) மூன்று ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது மோட்டோ நிறுவனம்.

To read this article in English 

இந்த மோட்டோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

மோட்டோ Z3 (Moto Z3)

இந்த போன் 6.3 அங்குல நோட்ச் திரையுடன் வருகிறது இந்த போன். மோட்டோ Z2 வரிசையில் வெளிவருகிறது இந்த Moto Z3.

ஸாண்ட்விச் க்ளாஸ் வடிவமைப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இருக்கிறது.

ஸ்னாப்ட்ராகன் 845 ப்ரோசசருடன் வரும் இந்த போனில் 12MP+12MP பின்பக்க இரட்டை கேமராக்கள் மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலோ ஒன் பவர் ( Motorola One Power )

6.23 அங்குல திரையுடன் வெளிவரும் இந்த போனில் ஐபோனில் இருப்பது போன்ற நோட்ச் வடிவமைப்புடன் வருகிறது.

மோட்டோரோலோ ஒன் பவர் ( Motorola One Power ) 19.9 என்ற திரை ஃபார்மட்டுடன் வர இருக்கிறது.

ஸ்னாப்ட்ராகன் 636 ப்ரோசசருடன் வரும் இந்த போனில் 6GB மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வர இருக்கிறது Motorola One Power ஸ்மார்ட்போன்.

பேட்டரி திறன் 3,780mAh ஆகும். இரட்டை பின்பக்க கேமராக்களையும் 8MP முன்பக்க கேமராவினையும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது இந்த Motorola One Power .

மோட்டோ ஒன் ( Moto One )

மோட்டோ ஒன் பவர் போன்றே மோட்டோ ஒன் ( Moto One ) போனின் சிறப்பம்சங்கள் இருக்கும். வெள்ளை நிற த்தில் இந்த போன் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close