57% ஆபர் விலையில் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி! என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

மோட்டோரோலா 43 இன்ச் கியூ.எல்.இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 57% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் உள்ளது.

மோட்டோரோலா 43 இன்ச் கியூ.எல்.இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 57% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியும் உள்ளது.

author-image
WebDesk
New Update
MOTOROLA 43 inch QLED Smart Google TV

மோட்டோரோலா 43 இன்ச் கியூ.எல்.இ.டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 சிறப்பம்சங்கள்!

பிளிப்கார்ட் தளத்தில் Flipkart SASA LELE Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. மோட்டோரோலா 43 இன்ச் கியூ.எல்.இ.டி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 (MOTOROLA 43 inch QLED Smart Google TV 2025) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

Advertisment

பிளிப்கார்ட் தளத்தில் 43FHDGQMV7Q மாடல் நம்பர் கொண்ட மோட்டோரோலா 43 இன்ச் கியூ.எல்.இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடலுக்கு 57% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியும் உள்ளது. எக்ஸ்சேஞ்ச் டிவிக்கு ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. எனவே, இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

Advertisment
Advertisements

Bezel-less உடன் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது இந்த டிவி. மேலும், 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 300 நிட்ஸ்பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது 1.07 பில்லியன் கலர்ஸ் மற்றும் ஹெச்.டி.ஆர்- 10 ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

மேலும் மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 மாடல் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியை வழங்குகிறது. சக்திவாய்ந்த குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் (Quad Core Mediatek Processor) உடன் ஸ்மார்ட் டிவி வெளிவந்து உள்ளது. அதேபோல் இந்த டிவியில் கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது.

கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS)அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா 43 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 டிவி. எனவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும், யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டால்பி ஆடியோ (Dolby Audio) கொண்ட 40W ஸ்பீக்கர்கள் உடன் இந்த மோட்டோரோலா 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பல்வேறு ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் பில்ட்இன் குரோம்காஸ்ட் ஆதரவு மற்றும் ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வருகிறது.

எச்.டி.எம்.ஐ போர்ட், யு.எஸ்.பி போர்ட், ப்ளூடூத் வி5.0, வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Smart TV

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: