Moto e7 power Price, Specifications Tamil News : மோட்டோரோலாவின் மோட்டோ இ7 பவர், இந்தியாவில் ரூ.7,499 ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டோ இ7 பவர் ஓர் பெரிய 5000 பேட்டரி மற்றும் 6.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே கொண்ட பட்ஜெட் சாதனம். இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படும். சந்தையில் இதேபோன்ற விலை அடைப்பில் இருக்கும் ரெட்மி 9ஐ, போக்கோ சி3, ரியல்மி சி 3, ரியல்மி சி 12 போன்றவற்றோடு இந்த மொபைல்போன் போட்டியிடும்.
மோட்டோரோலாவின் மோட்டோ இ7 பவர்: விலை
மோட்டோரோலாவின் மோட்டோ இ7 பவர் இரண்டு வகைகளில் வருகிறது. அடிப்படை 2 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி பதிப்பின் விலை ரூ.7,499. 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பிற்கு ரூ.8,299 செலவாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன், கோரல் மற்றும் டஹிடி நீலம் ஆகிய இரண்டு வண்ணங்களில் வருகின்றன. மோட்டோ இ7 பவர் பிப்ரவரி 26 முதல் மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் மற்றும் பிற முன்னணி சில்லறைக் கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
மோட்டோரோலாவின் மோட்டோ இ7 பவர்: விவரக்குறிப்புகள்
720 × 1,600 தெளிவுத்திறனுடன் 6.5 எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது, 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்பகத்தின் கட்டமைப்பில் வருகிறது. மேலும், இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடியது. இந்தத் தொலைபேசியை மீடியாடெக் ஹீலியோ ஜி25 ஆக்டா கோர் ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மோட்டோரோலாவின் தொலைபேசியில் டைப்-சி யூ.எஸ்.பி சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது எந்தவிதமான வேகமான சார்ஜிங்கையும் ஆதரிக்காது.
பின்புற கேமரா அமைப்பில் 13 எம்பி முதன்மை கேமரா, எல்இடி ஃபிளாஷ் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், செல்ஃபி கேமராவை வைக்க வாட்டர் டிராப்-ஸ்டைல் டாப் நாட்ச் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10-ஐ இயக்குகிறது. இது ஓர் பிரத்யேக கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் மற்றும் பின்புறத்தில் கைரேகை ரீடருடன் வருகிறது. பாதுகாப்பிற்காக, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 52 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"