Motorola Razr pre-order starts January 26 : சாம்சங், ஹூவாய் நிறுவனம் என அனைத்தும் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக அளவில் நாட்டம் செலுத்தி வந்த நிலையில் மோட்டோ நிறுவனமும் தங்களின் பங்குக்கு ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனும் இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும் என்று ஒருவருடம் வரை காத்திருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வருகின்ற 26ம் தேதி இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்குகிறது. பிப்ரவரி மாதம் 6ம் தேதி அன்று இந்த ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். நவம்பரில் விற்பனைக்கான அறிவிப்புகள் வெளியானது. டிசம்பர் மாதத்தில் முன்பதிவுகள் துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சில நாட்கள் இந்த ஸ்மார்ட்போனின் அப்டேட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் விலை தான் கொஞ்சம் கையை நெறிக்கிறது. 1500 டாலர்கள் இதன் விலை.
மேலும் படிக்க : நீங்க வேணும்னா குறிச்சு வச்சுக்கோங்க “இனி எல்லாமே ஸ்மார்ட் க்ளாஸ் தான்”…
சிறப்பம்சங்கள்
மடக்கப்பட்ட டிஸ்பிளேவில் பயன்படுத்தப்படும் செயலிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோட்டோ டிஸ்பிளே, மோட்டோ ஆக்சன்ஸ், மற்றும் மோட்டோ கேமரா போன்ற மிக முக்கிய சிறப்பம்சங்களை மட்டுமே பயன்படுத்த இயலும்.
க்ளோஸ்ட் டிஸ்பிளேவாக செயல்படும் இந்த போனின் ஃபோல்டபிள் பகுதி ஸ்க்ரோலிங்கிறாகவும், குயிக் செட்டிங்ஸ் டிஸ்பிளேவிற்காகவும் பயன்படுத்தப்படும்.
கடிகாரம், மீடியா கண்ட்ரோல், மற்றும் நோட்டிஃபிகேஷன்களுக்கு இரண்டாம் டிஸ்பிளே உதவியாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேர்ல்ட் இண்டெலெக்சுவல் ப்ரோபெர்ட்டி ஆர்கனிசேனனில் தங்களுடைய புதிய டிவைஸிற்கு காப்புரிமம் பெற விண்ணப்பம் பூர்த்தி செய்துள்ளது மோட்டோ. அதில் தான்
அதில் ஃபோல்டபிள் ஸ்கிரீனின் முழு அளவு, காம்செல் ஃபார்ம் ஃபேக்டர் மற்றும் இதர தகவல்கள் தரப்பட்டுள்ளன.