/tamil-ie/media/media_files/uploads/2020/10/s20-1.jpg)
Amazon, Flipkart Diwali sale 2020
Motorola, Samsung, Iphone offers Tamil News: தீபாவளி திருவிழா வரும் நிலையில், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் ஏற்கெனவே 2020-ம் ஆண்டின் பண்டிகை கால விற்பனையை அறிவித்துள்ளனர். சமீபத்தில், அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய தளங்கள் ஸ்மார்ட்போன்களில் அருமையான சலுகைகளை வழங்கியுள்ளன. இந்த ஆண்டு, பண்டிகை சீசன் விற்பனையின் போது ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். ரூ.40,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இங்கே.
மோட்டோரோலா ரேஸர் (2019)
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Motorola-Razr-main-6-300x225.jpg)
மோட்டோரோலா ரேஸர் (2019) ஃப்ளிப்கார்ட்டில் ரூ.84,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.1,24,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தீபாவளி சலுகையில், ரூ.40,000 தள்ளுபடி பெறுவீர்கள். ரூ.14,850 வரை எக்ஸ்ச்செஞ் சலுகையும், மாதத்திற்கு ரூ.3,542 கட்டணமில்லாத இ.எம்.ஐ விருப்பமும் உள்ளது. மேலும், மிகக் குறைந்த விலையில் இந்த ஸ்மார்ட்போனை பெற வங்கி கார்டு சலுகைகளையும் உண்டு.
சாம்சங் கேலக்ஸி எஸ்20+
/tamil-ie/media/media_files/uploads/2020/10/GalaxyS20Plus_5-300x225.jpg)
ரூ. 49,999 விலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்20+ கிடைக்கும். உங்கள் பழைய தொலைபேசியின் பரிமாற்றத்தில் ரூ.14,850 வரை தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் கொடுக்கிறது. குறிப்பிட்ட விலைக்கு, 8 ஜிபி RAM + 128 ஜிபி சேமிப்பு மாடலைப் பெறமுடியும். இந்தியாவில் முன்பு இதன் அடிப்படை 12 ஜிபி RAM + 256 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.73,999. இப்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.24,000 தள்ளுபடியை ஃப்ளிப்கார்ட் அளிக்கிறது. ஃப்ளிப்கார்ட் ஸ்மார்ட் மேம்படுத்தல் திட்டத்தைத் தேர்வுசெய்தால், ரூ.15,000 வரை மேலும் தள்ளுபடி கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி நோட் 10+
/tamil-ie/media/media_files/uploads/2020/10/galaxy-note-10-10-plus-3-300x167.jpg)
ஃப்ளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ரூ.59,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே விலைக்கு, 12 ஜிபி RAM + 256 ஜிபி சேமிப்பு மாடலைப் பெறலாம். தீபாவளி விற்பனை 2020-ன் போது, தொலைபேசி பரிமாற்றத்தில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.14,850 வரை ஃப்ளிப்கார்ட் தள்ளுபடி அளிக்கிறது. இது சாம்சங் கேலக்ஸி நோட் 10+-ன் விலையை மேலும் குறைக்கும். ஆனால், பரிமாற்ற விலை உங்கள் தற்போதைய தொலைபேசியின் நிலையைப் பொறுத்தது. விலை இல்லா இ.எம்.ஐ விருப்பமும் உள்ளது. ரூ.79,999 விலையில் இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகமானது. இப்போது சலுகையில், ரூ.20,000 தள்ளுபடியை பெறலாம்.
ஐபோன் எஸ்இ 2020
/tamil-ie/media/media_files/uploads/2020/10/iPhone-SE-2020-fb-300x167.jpg)
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் போது, ஐபோன் எஸ்இ 2020, ரூ .42,500-லிருந்து ரூ.32,999 விலையில் கிடைக்கும். இந்த ஐபோனுக்கு ரூ.9,501 தள்ளுபடியைப் பெறலாம். குறிப்பிட்ட விலைக்கு, ஃப்ளிப்கார்ட் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலை விற்பனை செய்கிறது. ரூ.14,350 வரை பரிமாற்ற சலுகை, இ.எம்.ஐ விருப்பங்கள் மற்றும் ஒரு சில வங்கி கார்டு சலுகைகளும் உள்ளன. மேலும், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் ரூ.1,500 வரை தள்ளுபடி சலுகையை பெற முடியும்.
ஏசஸ் ROG போன் 3
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Asus-ROG-Phone-3-300x222.jpg)
இந்தியாவில் ஏசஸ் ROG போன் 3-ன் விலை ரூ.49,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு, தற்போது ரூ.46,999-ஆக குறைந்திருக்கிறது. இந்த விலை 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது. இது ஓர் தற்காலிக தள்ளுபடி அல்ல. ஃப்ளிப்கார்ட் வழியாக இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 நிரந்தர விலைக் குறைப்பைப் பெற முடியும். இந்த போனில், ஸ்னாப்டிராகன் 865 ப்ளஸ் 5 ஜி SoC, 144Hz புதுப்பிப்பு விகிதத்துடன் 6.59 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் HDR10 + ஆதரவைப் பெறலாம். இது, 6,000 mAh பேட்டரி மற்றும் ஏர்டிரிகர் 3 சிஸ்டத்துடன் வருகிறது. ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்51
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Galaxy-M51-fb-300x167.jpg)
ரூ.22,499 விலைக்கு தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 51 விற்கப்படுகிறது. அமேசானில் ரூ.2,500 தள்ளுபடியை பெறலாம். சிட்டி, கோட்டக் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுக்கு ரூ.3,000 உடனடி தள்ளுபடி உள்ளது. அதாவது, சாம்சங் கேலக்ஸி எம்51 மொபைலை ரூ.20,000-க்கும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் AMOLED பேனல், ஸ்னாப்டிராகன் 730 ஜி SoC, குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் பல உள்ளன. உலகளவில் 7,000 mAh பேட்டரி கொண்ட ஒரே தொலைபேசி இதுதான்.
ரியல்மீ நர்சோ 20 ப்ரோ
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Narzo-300x167.jpg)
உங்கள் பட்ஜெட் ரூ. 20,000-ஐ விட சற்று குறைவாக இருந்தால், ரியல்மீ நர்சோ 20 ப்ரோவை நிச்சயம் தேர்வு செய்யலாம். 6 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.13,999 மட்டுமே. இந்த ரியல்மீ தொலைபேசியில் 6.5 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதமும், மீடியா டெக் ஹீலியோ ஜி 95 SoC உள்ளது. குவாட் பின்புற கேமரா அமைப்பில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. இந்த சாதனம் 4,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இது 65W சூப்பர் டார்ட் சார்ஜ் வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
/tamil-ie/media/media_files/uploads/2020/10/realme-Image_2-1-300x223.jpg)
அமேசான் மற்றும் Mi.com வழியாக ஷியோமியின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ரூ .15,999 விலையில் வாங்கலாம். முன்னதாக, இதே தொலைபேசி ரூ.16,999 விலையில் கிடைத்தது. 6.67 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 720 SoC, மற்றும் 5W0mah பேட்டரி ஆகியவற்றை 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வழங்குகிறது. மேலும், குவாட் பின்புற கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த அமைப்பில் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 32 மெகாபிக்சல் முன் கேமரா இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.