Motorola Tamil News, motorola g9 price: லெனோவாவுக்கு சொந்தமான மோட்டரோலா நிறுவனம், இந்தியாவில், மோட்டோ ஜி9 என்ற பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில், இந்தியாவில் முதன்முறையாக இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரூ.11,499 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த போன், ஜியோமி ரெட்மீ நோட் 9, ரியல்மீ் 6ஐ உள்ளிட்ட போன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். 3 கேமரா, 48 மெகாபிக்சல் பிரைமரி சென்சா்ர, 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங், 6.5 இஞ்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.
Advertisment
சிறப்பம்சங்கள்
மோட்டோ ஜி9 போனில், 6.5 இஞ்ச் 720பி பிளஸ் அல்லது ஹை டெபனீசன் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே உள்ளது. வாட்டர் டிராப் ஸ்டைப் நாட்ச் இதன் சிறப்பம்சம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 புராசசர், 4 ஜிபி ராம், 64 ஜிபி ஸ்டோரேஜ். இரண்டு சிம் வசதியிலான இந்த போனில் ஆண்ட்ராய்ட் 10 ஆபரேடிங் சிஸ்டம் உள்ளது.
48 மெகாபிக்சல் பிரைமரி சென்சா், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா உள்ளது.
5000 மெகாஹெர்ட்ஸ் பேட்டரி, 20 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஒருமுறை முழு சார்ஜ் ஏற்றினால், 2 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும்.
Motorola g9 price: இந்தியாவில் விலை நிலவரம்
4 ஜிபி ராம், 64 ஜிபி ஸ்டேரேஜ் கொண்ட மோட்டோ ஜி9 போனின் விலை ரூ.11,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரஸ்ட் கிரீன், மற்றும் சபைய் புளு நிறங்களில், வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil