Motorola’s foldable Razr
மோட்டோ என்றாலே உடனே நினைவுக்கு வருவது அந்த ஃப்ளிப் ஸ்டைல் தான். அதே வடிவமைப்பில் ஆனால் வெர்டிக்கள் ஸ்க்ரீனுக்கு பதிலாக ஃபோல்டபிள் டிஸ்பிளேயுடன் வெளியாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். கடந்த வருடம் இந்த வடிவமைப்பிற்காக காப்புரிமை வாங்கியது மோட்டோ நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெர்ட்டிக்களாக மடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்போனின் பின்பக்கம், மடிக்கப்பட்ட பிறகும் இரண்டாம் திரையாக செயல்படும்.
ஸ்நாப்ட்ராகன் 710 ப்ரோசசரை கொண்டு இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.
4GB/6GB RAM மற்றும் 64GB/128GB என இரண்டு விதமான ஸ்டோரேஜ்களுடன் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்.
2730mAh பேட்டரியுடன் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் மடிப்பதற்கு முன்பு 6.2 இன்ச் என்ற அளவில் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 1000 டாலர் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : 30 நாட்களுக்கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்