மொஸில்லா ஃவயர்வாக்ஸ் புதிய இன்பில்ட் ஏ.ஐ 'ஃவேக் ரிவ்யூ செக்கர் ' (Fake review-checker) என்ற அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் ஃவேக்ஸ்பாட் (Fakespot) மூலம் இயக்கப்படுகிறது. ஃவயர்வாக்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாங்கியது.
இதுகுறித்து MSPowerUser கூறுகையில், இந்த அம்சம் ஆரம்பத்தில் Amazon, Walmart மற்றும் Best Buy போன்ற இ-காமர்ஸ் தளங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து இந்த அம்சம் மற்ற இணையதளங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/cxidhtyujCl4L3sIu6VN.jpg)
ஃவேக்ஸ்பாட் நிறுவனம் machine learning மற்றும் ஏ.ஐ பயன்படுத்தி ரிவ்யூ பேர்டன் மற்றும் ஒற்றுமைகளைக் கண்டறிந்து அந்த பிராடக்டின் மொத்த ரிவ்யூகளையும் அனஸை செய்து உண்மை மற்றும் ஃபேக் ரிவ்யூவை கண்டறிந்து பயனர்களுக்கு காண்பிக்கும். A-F வரை கிரேடு செய்கிறது. A- நம்பகமான ரிவ்யூ என்றும் F என்பது பெரும்பாலும் போலியானது என்று அர்த்தம்.
எப்படி செக் செய்வது?
ஃவயர்வாக்ஸில் ‘ரிவ்யூ செக்கர்’ பயன்படுத்த முதலில் அமேசான் அல்லது பிற தளங்களில் product பக்கம் சென்று address bar-ல் வலப்புறத்தில் உள்ள price tag ஐகானை கிளிக் செய்யவும். அப்போது ஏ.ஐ அம்சம் அனைத்து ரிவ்யூகளையும் analyze செய்யும். பின்னர்அந்த product-கான கிரேடு வழங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“