Advertisment

தவளையின் உடலில் வளரும் காளான்: கர்நாடகாவில் கண்டுபிடிப்பு; விஞ்ஞானிகள் திகைப்பு

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளையின் உடலில் காளான் வளர்வது விஞ்ஞானிகளை குழப்பத்திலும், திகைப்பிலும் ஆழ்த்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Frog mush.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் விஞ்ஞானிகள் ஒரு ஆச்சரியமான கண்டுபிடிப்பை கண்டனர். தவளையின் உடலில் ஒரு பக்கத்தில் காளான் வளர்ந்து உள்ளது. ஒரு உயிரினத்தில் இருந்து காளான் வளர்வது இதுவே முதல் முறை.

Advertisment

ஜூன் 19, 2023 அன்று, கர்நாடகாவின் கார்காலாவின் மாலாவில் குத்ரேமுகா மலைத்தொடரின் மலையடிவாரத்தில் சாலையோரத்தில் மழைநீர் தேங்கும் குளத்தில் பல “ராவ் இன கோல்டன் பேக்டு தவளைகளை” ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதில் தவளை ஒன்றின் உடலின் வலப்பக்கத்தில் வெள்ளை நிறத்தில் ஒன்று வளர்ந்து இருந்ததை கண்டனர்.  பின்னர் அது  உயிருள்ள ஒரு தவளையிலிருந்து வளரும் காளான் என்று கண்டறிந்தனர். 

தவளை பிடிக்கப்படவில்லை, அதற்கு பதிலாக, ஆராய்ச்சியாளர்கள் அதை படம் எடுத்து ஆய்வு செய்தனர். 

இந்தப் படங்களைப் பார்த்த பூஞ்சை நிபுணர்கள் (Fungus experts) வெள்ளை நிறத்தில் வளர்ந்தது போனட் காளான் என அடையாளம் கண்டனர். இது பொதுவாக இறந்த  அல்லது அழுகிய மரத்தில் வளரும் என்று கூறினர். 

மற்ற உயிரினங்களுடன் கூட்டுவாழ்வு உறவில் வளரும் பல பூஞ்சைகள் உள்ளன. சில ஒட்டுண்ணிகள் உள்ளன, மேலும் இது பொதுவாக "கருப்பு பூஞ்சை" என்று அழைக்கப்படும் மியூகோர்மைகோசிஸ் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒரு உயிரினத்தில் காளான் வளர்வது இதுவே முதல் முறை என்று தி இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.

"எங்களுக்குத் தெரிந்த படி  உயிருள்ள தவளையில் இருந்து காளான் முளைத்தது இல்லை. இந்த தவளை பிடிக்கப்பட வில்லை. எனவே இதை கணிக்க முடியவில்லை"  என்று ஆய்வின் ஆசிரியர் கூறினார். 

குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் ஈரப்பதமான சூழல்கள் காளான் வளர சிறந்த சூழலை வழங்கியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, அங்கு எவ்வாறு காளான் வளர ஆரம்பித்தது என்பது பற்றி பல கோட்பாடுகள் உள்ளன. ஆனால் தவளை பிடிபடாததால், காளான் எப்படி சரியாக வளர்ந்தது என்பது தெரியவில்லை. காளானின் வளர்ச்சி தவளையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் தீர்மானிக்க முடியாது என்றார். 

உலகெங்கிலும் உள்ள 700-க்கும் மேற்பட்ட வகையான amphibians களை அச்சுறுத்தும் ஒரு பூஞ்சை ஏற்கனவே இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி கவலை தெரிவிக்கின்றனர்: Batrachochytrium dendrobatidis. இது சைட்ரிடியோமைகோசிஸ் என்ற நோயை ஏற்படுத்துகிறது, இது சில மக்களில் ஆங்காங்கே இறப்புகளை ஏற்படுத்தும், மற்றவர்களுக்கு 100 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு தவளை இனங்களைப் பாதுகாக்கவும் அறியப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் எதுவும் இல்லை. 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/mushroom-growing-on-frog-india-9161001/

அதே நேரம், கலிபோர்னியா ரிவர்சைட் பல்கலைக்கழகத்தின் பூஞ்சை சூழலியல் நிபுணர் சிட்னி கிளாஸ்மேன் கூறுகையில், இந்த வெள்ளை நிற வளர்ச்சி ஒரு காளான் என்று நான் நம்பவில்லை என்றார். தொடர்ந்து கூறிய அவர், இதை ஆய்வு செய்ய வித்து மற்றும் மரபணு மாதிரிகள் போன்ற பல சான்றுகள் தேவைப்படும், இவை வைத்து தீவிர ஆய்வு செய்த பிறகே அது போனட் காளானான அல்லது வேறு எந்த வகையான காளான் என்று உறுதியாக அடையாளம் காண வேண்டும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mushroom Frog
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment