பிரமிக்க வைத்த ஹூவாய் மேட் X ஃபோல்டபிள் போன்… தலை சிறந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் MWC-ல் வெளியீடு

ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 2299 யூரோக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

By: February 25, 2019, 2:12:47 PM

MWC 2019 top launches : ஸ்பெய்ன் நாட்டில் உள்ள பார்சிலோனாவில் இந்த வருடத்திற்கான மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இதர கேட்ஜெட்டுகளை இங்கு வெளியிடுவது வழக்கம். நேற்றைய நிகழ்வில் மட்டும் நோக்கியாவின் ப்யூர்வியூ 9, ஹூவாயின் போல்டபிள் போன் மேட் எக்ஸ், மற்றும் சியோமியின் மிக்ஸ் மி 3 போன்ற ஸ்மார்ட்போன்கள் வெளியாகின.

MWC 2019 top launches

ஹூவாய் மேட் எக்ஸ்

சான் பிரான்சிஸ்கோவில் கடந்த வாரம் நடைபெற்ற அன்பேக்ட் என்ற நிகழ்வில், உலகின் முதல் ஃபோல்டபிள் போனான சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. நான்கு நாட்கள் கழித்து அதனை விட கூடுதலான விலையில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ஃபோல்டபிள் போனின் விலை 1980 அமெரிக்க டாலர்கள் என்றால், ஹூவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 2299 யூரோக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் முதல் போல்டபிள் போன் என்ற பெயர் பெற்றுள்ள மேட் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : ஹூவாய் நிறுவனம் வழங்கும் போல்டபிள் போன் பற்றிய சிறப்பம்சங்கள்

8 இன்ச் அளவு, 5.4 எம்.எம். திக்னெஸ், மடக்கும் போது 11 எம்.எம். திக்னெஸ். கர்வ்ட் ஸ்கீரின், பின்பக்கமாக மடிக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நோக்கியா 9 ப்யூர்வியூ

5 கேமராக்களைக் கொண்டுள்ள உலகின் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டது நோக்கியா. ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் (Zeiss optics) லென்ஸ்களான அவைகளில் 2 ஆர்.ஜி.பி. கேமராக்கள் மற்றும் இதர மூன்று மோனோக்ரோம் லென்ஸ்கள் ஆகும்.

அதிகப்படியான நாய்ஸ் ரிடெக்சனோடு வெளியாக இருக்கும் இந்த போன் மார்ச் மாதத்தில் இருந்து விலைக்கு வருகிறது. போனின் விலை 699 அமெரிக்க டாலர்களாகும். இந்த போனுடன் Nokia 210, Nokia 4.2, Nokia 3.2 and Nokia 1 Plus போன்களும் வெளியிடப்பட்டன.

சியோமி மிக்ஸ் மை 3

5ஜி தொழில்நுட்பத்தில் சியோமியின் மிக்ஸ் மை 3 வேரியண்ட் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போன் ஏற்கனவே கடந்த அக்டோபரில் 4ஜி தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 6.39 இன்ச் எச்.டி.ஆர் AMOLED திரை பொருத்தப்பட்டுள்ளது.

இதன் ரெசலியூசன் 2,340 x 1,080 ஆகும். ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. X50 மோடம் மற்றும் 12MP இரட்டை பின்பக்க கேமராக்கள் இதன் மற்ற சிறப்பம்சங்களாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Mwc 2019 top launches huawei mate x foldable 5g phone nokia 9 pureview xiaomi mi mix

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X