/tamil-ie/media/media_files/uploads/2019/02/a691.jpg)
MWC 2019: Xiaomi Mi Mix 3 comes with 5G connectivity; Mi 9 also announced - MWC 2019: 5G வசதியுடன் வருகிறது Xiaomi Mi Mix 3 மொபைல்! Mi 9 மொபைலும் அறிமுகம்
க்சியோமி நிறுவனம், Mi Mix 3 எனும் 5G மொபைலை அறிமுக செய்ய உள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் இந்த மொபைலை அறிமுக செய்ய இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.48,258-லிருந்து இதன் விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi Mix 3, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது 4G LTE சப்போர்ட் செய்யும் மொபைலாகும்.
Mi Mix 3 மொபைல் 6.39 இன்ச் HRD அமோல்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 2,340 x 1,080 பிக்சல் தெளிவு கொண்ட மொபைல் இது. அதேபோல், ஸ்நாப்டிராகன் 855 பிராசசர், X50 மோடம் கொண்டுள்ளது. 12 மெகா பிக்சலுடன் டூவல் லென்ஸ் கேமரா கொண்டுள்ளது.
மேலும், Mi 9 மொபைலையும் க்சியாமி அறிமுகம் செய்யவிருக்கிறது. 6.39-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே முழு HD+ ரிசல்யூஷன் கொண்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 855 பிராசசர், அண்டர் டிஸ்பிளே கைரேகை சென்சார், 3,300mAh பேட்டரி, 20W அதிவேக சார்ஜிங் கொண்டுள்ளது. இதில், மூன்று கேமரா உள்ளது. மெயின் கேமராவில் 48MP, 16MP அல்ட்ரா-வைட் சென்சார், 12MP 2x ஆப்டிக்கல் zoom லென்ஸ் உள்ளது. தவிர, 20 MP செல்பி கேமரா உள்ளது.
Mi 9 மொபைலின் விலை ரூ.36,193ல் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. ஸ்பெயினில் இதன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.