க்சியோமி நிறுவனம், Mi Mix 3 எனும் 5G மொபைலை அறிமுக செய்ய உள்ளது. ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெறவுள்ள மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் இந்த மொபைலை அறிமுக செய்ய இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.48,258-லிருந்து இதன் விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi Mix 3, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அது 4G LTE சப்போர்ட் செய்யும் மொபைலாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a692-300x217.jpg)
Mi Mix 3 மொபைல் 6.39 இன்ச் HRD அமோல்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 2,340 x 1,080 பிக்சல் தெளிவு கொண்ட மொபைல் இது. அதேபோல், ஸ்நாப்டிராகன் 855 பிராசசர், X50 மோடம் கொண்டுள்ளது. 12 மெகா பிக்சலுடன் டூவல் லென்ஸ் கேமரா கொண்டுள்ளது.
மேலும், Mi 9 மொபைலையும் க்சியாமி அறிமுகம் செய்யவிருக்கிறது. 6.39-இன்ச் அமோல்ட் டிஸ்பிளே முழு HD+ ரிசல்யூஷன் கொண்டுள்ளது.
ஸ்நாப்டிராகன் 855 பிராசசர், அண்டர் டிஸ்பிளே கைரேகை சென்சார், 3,300mAh பேட்டரி, 20W அதிவேக சார்ஜிங் கொண்டுள்ளது. இதில், மூன்று கேமரா உள்ளது. மெயின் கேமராவில் 48MP, 16MP அல்ட்ரா-வைட் சென்சார், 12MP 2x ஆப்டிக்கல் zoom லென்ஸ் உள்ளது. தவிர, 20 MP செல்பி கேமரா உள்ளது.
Mi 9 மொபைலின் விலை ரூ.36,193ல் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. ஸ்பெயினில் இதன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.